சீனாவில் சுமார் 22 ஆயிரம் பேர் வசிக்கும் பிரம்மாண்டமான 'ரீஜன்ட் இன்டர்நேஷனல் அபார்ட்மென்ட்' எனும் அடுக்குமாடிக் குடியிருப்பே ஒரு பெரிய நகரமாக உருவாகி உள்ளது.
பரபரப்பான 'ஹாங்சூ' என்ற வணிகப் பகுதியில் கியாஞ்ஜியாங் செஞ்சுரி சிடி என்ற நகரத்தில் உள்ள இந்த அடுக்குமாடிக் குடியிருப்பானது இளைய தலைமுறையினரிடையே 'ஸ்டேடஸ் சிம்பல்' என கருதப்படுகிறது. இங்கு 30 ஆயிரம் பேர் வரை வசிக்க முடியும்.
ஏழு நட்சத்திர ஓட்டல் கட்டும் திட்டத்தோடு கட்டடம் கட்டத் தொடங்கினர். ஆனால் கட்டி முடிக்கும் தருவாயில் 'மக்களுக்கான குடியிருப்பு' என முடிவு செய்து நட்சத்திர ஓட்டல் அறைகளை, குடியிருப்புகளுக்கு ஏற்ப மாற்றி வடிவமைத்துவிட்டனர். எனவே ஜன்னலே இல்லாத ஒற்றை அறை தொடங்கி, சொகுசு பால்கனி கொண்ட வசதியான இல்லம் வரை பல்வகையான வசிப்பிடங்களை உருவாக்கி இருக்கின்றனர். ஜன்னல் இல்லாத ஒற்றை அறைக் குடியிருப்பின் மாத வாடகை சுமார் 17 ஆயிரம் ரூபாயும், பால்கனி வைத்த சொகுசுக் குடியிருப்புக்கு மாத வாடகை சுமார் 47 ஆயிரம் ரூபாயும் நிர்ணயித்துள்ளனர்.
வானிலிருந்து பார்த்தால் 'எஸ்' என்ற ஆங்கில எழுத்து போன்ற வடிவமைப்பில் கட்டப்பட்டுள்ள 675 அடி உயரமுள்ள கட்டடத்தின் ஒரு பக்கம் 36 தளங்களும், இன்னொரு பக்கம் 39 தளங்களும் இருக்கின்றன.

இங்கு உள்ளேயே நூற்றுக்கணக்கானவர்கள் ஒரே நேரத்தில் அமர்ந்து சாப்பிடக் கூடிய வகையில் உணவகங்கள், நீச்சல் குளங்கள், முடிதிருத்தும்- அழகு நிலையங்கள், இணைய கஃபே, சூப்பர் மார்க்கெட்டுகள், பொழுதுபோக்கு மையங்கள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இருப்பதால், இங்கு வசிப்போர் எந்தவொரு காரணத்துக்காகவும் குடியிருப்பைவிட்டு வெளியே செல்ல வேண்டிய அவசியமில்லை.
இங்கு வசிப்பவர்கள் மாணவர்கள், இளம் பட்டதாரிகள், சமூக ஊடகங்களில் மிகவும் பிரபலமாக விளங்குபவர்கள், இளம்தொழில் முனைவோர்கள் உள்ளிட்டோர்தான் பெரும்பாலானோர் ஆவார்.
இந்தக் குடியிருப்புக்கு அருகில் உள்ள பல சீன நகரங்களில் வசிக்கும் மக்கள்தொகையைவிட, இந்தக் குடியிருப்பில் வசிப்பவர்களின் எண்ணிக்கை அதிகம்.
சிங்கப்பூரில் உலகின் இரண்டாவது ஏழு நட்சத்திர ஓட்டலை வடிவமைத்த ' அலிசியா லூ' என்ற கட்டடக் கலை நிபுணர்தான் இந்தக் குடியிருப்பின் தலைமை டிசைனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தெரியுமா?

கடலோர கிராம மக்கள் த.வெ.க.வை புறக்கணிப்பாா்கள்: மு.அப்பாவு

வள்ளுவரின் புகழ்பாடும் கோயில்...

மீட்கப்படும் மண்ணின் மரபு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


