இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தேதிக்காக தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல திசைகளில் இருக்கும் பணக்காரத் தயாரிப்பாளர்கள் காத்துக் கிடக்கிறார்கள். ஆனால், ரஜினி படத்தை முடித்துவிட்டு, "ட்ரீம் வாரியர்ஸ்' நிறுவனத்துக்கு ஒரு படத்தை இயக்க சைலன்ட்டாக முடிவெடுத்திருக்கிறாராம் லோகேஷ். "ஆரம்பத்தில் கைகொடுத்த நிறுவனம்' என நெருங்கியவர்களிடம் சொன்ன லோகேஷ், கார்த்தியை வைத்து "கைதி 2' இயக்கவும் ரெடி என்கிறாராம். இதற்கான ஒன்லைன் ஆர்டரையும் கார்த்திக்கு மெயில் அனுப்பியிருக்கிறார் லோகேஷ்.
-----------------------------------------------
"பூவெல்லாம் உன் வாசம்' மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை சோனா. சினிமாவில் 23-ஆவது ஆண்டைக் கொண்டாடுகிறார். சில வருடங்களுக்கு முன்னர் வெளியான "கனிமொழி' என்ற படத்தின் மூலம் தயாரிப்பாளரும் ஆனவர், இப்போது இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கிறார். தனது திரையுலக பயணம், தான் சந்தித்த ஏற்ற இறக்கங்கள் என தன் அனுபவங்களை வெப்சீரிஸôகக் கொண்டு வருகிறார். கதையை எழுதியதுடன் "ஸ்மோக்' என்று பெயரிட்டு அதை இயக்கவும் இருக்கிறார். இந்த வெப்சீரிஸ் வெளியாகும்போது "தி பிகினிங் ஆப் எண்ட்' சேர்ர்க்க இருக்கிறார். அதாவது ஒரு கவர்ச்சி நடிகையின் முடிவு என்பதுதான் அதற்கு அர்த்தம். சென்னை மற்றும் கேரளாவில் இதன் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது. ஷார்ட்ஃபிலிக்ஸ் துணையுடன் இதை சோனாவே தயாரிக்கிறார். தமிழ், மலையாளத்திலும் இது வெளிவரவுள்ளது.
-----------------------------------------------
பாலிவுட்டில் சித்தார்த் மல்ஹோத்ராவுடன் நடித்த "மிஷன் மஜ்னு'க்குப் பிறகு, மீண்டும் ஹிந்தியில் ரன்பீர் கபூரின் "அனிமல்' படத்தில் ஒப்பந்தம் ஆனார் ராஷ்மிகா மந்தனா. அதன் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸýக்கு தயாராகிவிட்டது. அதன் பாடல் ஒன்றில் ரன்பீருடன் லிப் கிஸ் அடித்து அந்தக் காட்சி வைரலாகவும் ஆகியிருக்கிறது. படம், டிசம்பர் முதல் தேதியன்று வெளியாவதால் படபடப்பில் இருக்கிறார் ராஷ்மிகா. தவிர, அல்லு அர்ஜூனுடன் "புஷ்பா 2', தமிழில் "ரெயின்போ' ஆகிய படங்களையும் கைவசம் வைத்திருக்கிறார் ராஷ்மிகா.
-----------------------------------------------
கமல் நடிப்பில் "இந்தியன்2' படத்தைத் தொடங்கிய நேரத்திலேயே ஷங்கருக்கும் லைகா நிறுவனத்துக்கும் இடையே பெரிய பிரச்னை உருவானது. நீதிமன்றம் வரை நீண்ட பஞ்சாயத்து, ஒருவழியாக முடிவுக்கு வந்து ஷூட்டிங்கும் முடிந்துவிட்டது. எடிட் செய்து பார்த்தால், படம் மணிக்கணக்கில் போய்க்கொண்டே இருந்ததாம். அதனால், படத்தை இன்னும் இரண்டு பாகங்களாக உருவாக்கும்விதத்தில் ஷங்கர் எடிட்டை மாற்றிக் காட்ட, லைகாவுக்கு ஏக சந்தோஷமாம். பணரீதியான பஞ்சாயத்துகளைக் கடந்து "இந்தியன்3' படமும் அமைதியாக உருவாகிவருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

யார் அனுமதி கொடுத்தது? பத்திரிகையாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட துணை ஆணையர்!

உலகக் கோப்பை: ஈரானுக்குப் பதிலாக விளையாட டிரம்ப் விடுத்த அழைப்பை நிராகரித்த இத்தாலி!

ஆம் ஆத்மியில் இருந்து விலகிய எம்.பி.க்களுக்கு பஞ்சாப் முதல்வர் கடும் கண்டனம்

பெண்கள் கருத்தரிக்க உதவும் 10 உணவுகள்!
வீடியோக்கள்

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை


