'பல்லெல்லாம் நீலமாக போயிருக்கே. ஏன் டாக்டர்..'
'அளவுக்கு அதிகமாக 'ப்ளூ டூத்' உபயோகப்படுத்துவீங்களா..?'
வி.ரேவதி,
தஞ்சை.
'நீயும் உன் மனைவியும் நிறைய துணிமணி எடுத்தீங்களே! நீ என்ன எடுத்தே..?'
'அவ புடவை எடுக்கிற அழகை செல்போனில் படம் எடுத்தேன்!'
கே.இந்து குமரப்பன்,
விழுப்புரம்.
'என் அப்பா, என்னை உலகமே தெரியாம வளர்ந்திருக்கியே என்பார். ஆனால் என் பையனோ, என்னை இதை மாதிரியே மாத்தி சொல்றான்..!'
'என்னன்னு...'
'இப்படி கூகுளை கூட பயன்படுத்தத் தெரியாமல் ஏன் இருக்கேன்னு...'
கிருஷ்ணரத்தினம்,
வி.சி.செங்கல்பட்டு.
'எங்க வீட்டில் யாரிடமும் ஆன்ட்ராய்டு செல்போனோ, டி.வி.யோ கிடையாது..'
'அதான். உங்க வீட்டில் மாமியார் மருமகள் ஒன்றாக இருக்காங்க..'
-அ.சுஹைல் ரஹ்மான்,
திருச்சி.
'ஏண்டா போலீஸ் ஸ்டேஷனில் சித்த பிரமை பிடிச்சவன் மாதிரி இருக்கே..?'
'ரொம்ப கஷ்டப்பட்டு ஒருத்தனிடம் செல்போனை திருடினேன். ஆனா அப்புறமா பார்த்தா அது பட்டன் போன்...'
-எம்.அசோக்ராஜா,
அரவக்குறிச்சிப்பட்டி.
'என் மனைவி நான் சொன்னதையெல்லாம் குத்தி, குத்தி காட்டுறா..?'
'இது சகஜம்தானே!'
'அட நீங்க வேற அவ கையில் வைச்சிருக்கிற செல்போனால் தலையை குத்துறா சார்?'
ஆர்.சுந்தரராஜன்,
சிதம்பரம்.
'அரசர் ஹைடெக்குக்கு அடிமையா?'
'இரவு நகர் வலத்துக்கு பதிலாக டிரோன்கள்தான்!'
மஞ்சுதேவன்,
பெங்களூரு.
'இந்தக் காலத்து பசங்களுக்கு பணத்தோட அருமை தெரியலை?'
'எப்படி தெரியும்? எல்லோரும் கார்டு, கூகுள் பேன்னு யூஸ் பண்றாங்களே..!'
'என் மருமகளுக்கு ரொம்ப திமிர்தான்!'
'ஏன் என்னாச்சு?'
'நான் அவளுக்குப் போன் செய்தால் நாய் குரைக்கிற மாதிரி ரிங் டோன் வைச்சிருக்கா?'
'கடைசியா நீங்க எப்ப ஸ்கேன் எடுத்தீங்க..?'
'நேத்து ஏர்போர்ட்டுக்கு போனேன். அங்கே எடுத்தாங்க டாக்டர்'
தீபிகா சாரதி,
சென்னை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!

ஜன நாயகன் லீக்: படத்தொகுப்பாளர் இடைநீக்கம்!

ஜியோ பிளாட்ஃபார்ம் லாபம் 13% உயர்வு!

பாஜகவில் இணைந்த 3 எம்பிக்களை தகுதிநீக்கம் செய்ய வேண்டும்! ஆம் ஆத்மி வலியுறுத்தல்!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


