கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

திரைக்  கதிர்

ஹாலிவுட்டில் வெளியான தொலைக்காட்சி தொடர் "தி நைட் மேனேஜர்'. ஆறு அத்தியாயங்களைக் கொண்ட இந்தத் தொடர் 2016 -ஆம் ஆண்டில் வெளியானது.

News image
Updated On :7 பிப்ரவரி 2024, 6:32 am

தினமணி

ஹாலிவுட்டில் வெளியான தொலைக்காட்சி தொடர் "தி நைட் மேனேஜர்'. ஆறு அத்தியாயங்களைக் கொண்ட இந்தத் தொடர் 2016 -ஆம் ஆண்டில் வெளியானது. இந்தத் தொடர் தற்போது இதே பெயரில் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டிருக்கிறது. இதில் "பொன்னியின் செல்வன்' புகழ் நடிகை சோபிதா துலிபாலா, பாலிவுட் நட்சத்திரங்கள் அனில் கபூர், ஆதித்யா ராய் கபூர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பிரியங்கா கோஷ், ரூக் நபீல், சந்திப் மோடி ஆகியோர் இணைந்து இயக்கியுள்ள இந்தத் தொடர் டிஸ்னி ஹாட் ஸ்டாரில் வெளியாகியுள்ளது. 

-----------------------------------

ராப் வகை பாடலாக உருவாகியிருக்கும் "பொய் பொய் பொய்'  எனும் இப்பாடல் முழுக்க முழுக்க காதலை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. காதலில் ஏமாற்றி செல்லும் பெண்ணின்  துரோகம், வலி, ஏமாற்றம்  என  காதலின் துயர முகத்தை அழுத்தமான வரிகளில், பேசுகிறது இப்பாடல்.   துடிப்பான இசை, அழகான விஷுவல்களில் மனதை கொள்ளைக் கொள்ளும் அற்புதமான காதலர் தின பரிசாக இப்பாடல் அமைந்துள்ளது.  ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளார். 

-----------------------------------

"பாகுபலி' படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகர் பிரபாஸிற்கு தெலங்கானா, ஆந்திரா ஆகிய மாநில எல்லைகளைக் கடந்து தென்னிந்தியா மற்றும் வட இந்தியா முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். ஒவ்வொரு ரசிகர்களுக்கும் தங்களது அபிமான நட்சத்திரத்தை சந்திக்க எப்போதும் ஆவலுடன் காத்திருப்பார்கள். இந்நிலையில் நடிகர் பிரபாஸ் நடிப்பில் வெளியான "ராதே ஷ்யாம்' படத்திற்காக அறிவிக்கப்பட்ட போட்டியில் வெற்றி பெற்ற ரசிகர்களை  ஹைதராபாத்தில் சந்தித்துள்ளார். 

-----------------------------------

ராகவா லாரன்ஸ் - பி.வாசு இணைந்த "சந்திரமுகி 2' படப்பிடிப்பு மும்முரமாக நடந்து வருகிறது. சமீபத்தில் கூட, "கிழக்கு சீமையிலே' விக்னேஷ் இதில் இணைந்திருந்தார். வடிவேலுக்கு "நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' கைவிட்டதால் அவர் "மாமன்னன்' படத்தையும், "சந்திரமுகி 2'ஐயும் பெரிதும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார். பாலிவுட் குயின் கங்கனா ரணாவத்தும் முக்கியமான ரோலில் நடித்து வருகிறார்.  அவருக்கான காட்சிகள் முழுவதுமாக எடுக்கப்பட்டு விட்டன. 

-----------------------------------

ஐஸ்வர்யா ரஜினியின் "லால் சலாம்' படப்பிடிப்பு தொடங்கி விட்டது. விஷ்ணு விஷால், விக்ராந்த், அனு இமானுவேல் எனப் பலரும் இதில் நடித்து வருகிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். ரஜினி இதில் இஸ்லாமியர் கதாபாத்திரத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கிறார். "ஜெயிலர்' படப்பிடிப்பை முடித்துவிட்டு இதன் படப்பிடிப்பில் அவர் பங்கேற்கிறார்.  

-----------------------------------

லைகாவின் 24- ஆவது படமாக, இயக்குநர் பாரதிராஜா, அருள்நிதி நடிப்பில் அறிமுக இயக்குநர் ஹரீஷ் பிரபு ஒரு படத்தை இயக்கி வருகிறார். "திருவின் குறள்' என இதற்கு தலைப்பு வைத்திருப்பதாகத் தகவல். சமீபத்தில் திரைக்கு வந்த "டாடா' படத்தின் இயக்குநர் கணேஷ் கே.பாபு, அடுத்து லைகாவுடன் கைகோர்க்கிறார். இதற்கான நடிகர், நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது. 

-----------------------------------

அஜித்தின் 62- ஆவது படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவார் என்றும் அறிவித்தனர். அதன் பிறகு வெளியேறிவிட்டார். அவர் ஏன் வெளியேறினார், என்ன நடந்தது என்பதும், மகிழ் திருமேனி "ஏகே 62'க்கு எப்படி வந்தார் என்பது குறித்தும் புதிராகவே உள்ளது.  இப்போதைக்கு மகிழ் திருமேனி இயக்குவது விரைவில் உறுதியாகிவிடும் என்கிறார்கள். மகிழ், அஜித்தைச் சந்தித்ததும், கதை சொன்னதும் உண்மை. ஆனால், இன்னமும் முத்தரப்பு பேச்சு வார்த்தைகள் நீடித்து வருவதாகச் சொல்கிறார்கள். 

-----------------------------------

"பொன்னியின் செல்வன் - 2' படத்தின் டப்பிங் முழுவதும் நடந்து முடிந்துவிட்டது. அதன் வெளியீட்டுத் தேதி ஏப்ரல் 28 என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டது என்பதால் தற்போது கிராபிக்ஸ் வேலைகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இதனையடுத்து அடுத்த மாதம், படக்குழு வெளிமா நிலங்களுக்கு  படத்தை விளம்பரப்படுத்த கிளம்பவிருக்கிறார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.