ஆர்யாவின் கதை வேட்டை ஒரு வழியாக முடிவுக்கு வந்திருக்கிறது. முத்தையா இயக்கும் "காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்' படத்துக்கு அடுத்தபடியாக யாருக்குத் தேதி கொடுக்கலாம் எனப் பலரிடமும் தீவிரமாகக் கதை கேட்டு வந்தார் ஆர்யா. விஷ்ணு விஷால் நடிப்பில் "எஃப்.ஐ.ஆர்' படத்தை இயக்கிய மனு ஆனந்த் சொன்ன கதை அவருக்கு ரொம்பவே பிடித்துப்போக, உடனே ஓகே சொல்லிவிட்டார். பிரின்ஸ் பிக்சர்ஸ் லக்ஷ்மண், கார்த்தியை வைத்துத் தயாரிக்க இந்தக் கதையைக் கேட்டு வைத்திருந்தார். கார்த்தி பிஸியான நிலையில், ஆர்யா தேதி கிடைக்க, பிரின்ஸ் நிறுவனமே தயாரிக்கிறது.
ஹாட் ஸ்டார் தயாரிப்பில், சசிகுமார் இயக்கத்தில் உருவாகும் "குற்றப் பரம்பரை' வெப் சீரீஸ் டீம், விரைவில் படப்பிடிப்புக்கு கிளம்பவிருக்கிறது. ஐநூற்றுக்கும் மேற்பட்ட பக்கங்களில் திரைக்கதையை அழகிய பவுண்டாக்கி சசிகுமார் கொடுத்தவிதம், "ஹாட் ஸ்டார்' நிறுவனத்தை அசத்திவிட்டதாம். "பல கோடி ரூபாய் முதலீட்டில் உருவாகும் படைப்புக்கு இவ்வளவு க்ளியரான திரைக்கதை வரைவு தேவை' எனப் பலருக்குமான முன்னுதாரணமாக சசிகுமாரின் பாணியைச் சொல்கிறது ஹாட் ஸ்டார் நிறுவனம்.
சூர்யாவை வைத்து "எதற்கும் துணிந்தவன்' படத்தை முடித்த பிறகு, இன்னமும் அடுத்த படத்தை அறிவிக்காமல் அமைதி காத்து வருகிறார் இயக்குநர் பாண்டிராஜ். சிவகார்த்திகேயன், கார்த்தியின் தேதிகளுக்காகக் காத்திருந்தவர், அவர்களிடமிருந்து எந்த பதிலும் வராததால் விஷால் பக்கம் திரும்பினார். விஷால் ஓகே சொன்னாலும், அடுத்தடுத்து பலவிதமான பஞ்சாயத்துகளில் அவர் சிக்கிவருவதால் அவரோடு இணைகிற திட்டமும் இல்லையாம். "விடுதலை' படத்தில் பெரிய கவனம் பெற்றிருக்கும் சூரி, பாண்டிராஜுக்கு ரொம்பவே விசுவாசமானவராம். அதனால், அவரோடு இணைவதற்குத் தயாராகி வருகிறார் பாண்டிராஜ்.
இந்தியன், முதல்வன், ஆளவந்தான் போன்ற படங்களில் நடித்து தமிழ் திரையுலகிலும் பிரபலமானார் மனிஷா கொய்ராலா. கடந்த 2002-இல் வெளியான "பாபா' படத்தில் ரஜினிக்கு ஜோடியாக மனிஷா கொய்ராலா நடித்திருந்தார். பாபா படம் வெளியாகி தோல்வியைச் சந்தித்தது. இந்த நிலையில் சமீபத்தில் ரீ ரிலிஸ் செய்யப்பட்ட பாபா படத்தை பார்த்து மகிழ்ந்ததாக தெரிவித்துள்ளார் மனிஷா. "தமிழில் கடைசியாக நான் நடித்த மிகப் பெரிய படம் பாபாதான். பாபா படம் மீது ரசிகர்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருந்த நிலையில் படம் தோல்வியைச் சந்தித்தது. படத்தின் தோல்வி எனது கேரியரை பாதிக்கும் என்று நினைத்தேன். அது போலவே நடந்து விட்டது'' என்றும் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மது, சூதாட்ட விளம்பரங்களில் நடிக்க மாட்டேன்: ஜிவி பிரகாஷ்
ஒட்டுமொத்த மத்திய அமைச்சரவையையும் களமிறக்கி பாஜக பிரசாரம் செய்தும் பலனளிக்காது! - மமதா
கே.எல்.ராகுல் சதம் வீண்: டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப்!

போதிய பேருந்து வசதி இல்லை! 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வாக்களிக்க முடியவில்லை! - Nirmal Kumar | TVK
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


