மறுபடியும் ஏ.வி.எம். நிறுவனம் பட தயாரிப்பை தொடங்கப் போகிறார்கள். அதற்கான திரைக்கதையை முக்கியமான இளம் இயக்குநர்களிடம் கேட்டு இருக்கிறார்கள். இணைத் தயாரிப்பாக சிலரை சேர்த்து கொள்ளவும் திட்டமிட்டுருக்கிறார்கள். ஏ.வி.எம். சரவணன் இதற்கான முக்கியமான ஹீரோக்களிடம் பேசியிருக்கிறார். அதற்கு முன்னதாக பெரிய பட்ஜெட்டில் இல்லாமல் மீடியம் பட்ஜெட்டில் படங்கள் தயாரிக்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.
சூர்யா - "சிறுத்தை' சிவாவின் "சூர்யா42' படப்பிடிப்பு கோவாவில் நடந்து வருகிறது. இதற்கிடையே பாலாவின் படம் எப்போது மீண்டும் துவங்கும் எனவும் கேட்க ஆரம்பித்துள்ளனர். பாலாவின் கதையில் கிட்டத்தட்ட பாதிக்கு மேல் திரைக்கதையை வேறு மாதிரியாக மாற்றிவிட்டார். அவர் முதலாவதாக செய்த தசை அதிக உடல் உழைப்பை வேண்டுவதாக இருந்தது. அதிகம் சிரமப்பட்டார் சூர்யா. இப்போது மாற்றம் நிகழந்துள்ளதால் விரைவில் படப்படிப்பு முடியும் எனத் தெரிகிறது.
பாலிவுட்டில் வெளியான "தன்ஹாஜி: தி அன்சங் வாரியர்' என்ற படத்தை இயக்கி, தேசிய விருதை வென்ற இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் தயாராகி வரும் படம் ‘ஆதி புருஷ்'. இதில் பிரபாஸ் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கீர்த்தி சனோன் நடித்திருக்கிறார். உத்தரப்பிரதேசத்தின் புனித பூமியான அயோத்தியில் உள்ள சரயு நதிக்கரையில் இப்படத்தின் டீசர் மற்றும் போஸ்டர் வெளியிடப்பட விருக்கிறது.
அடுத்த படத்திற்காக டாப்ஸியை அழைத்திருக்கிறார் வெற்றிமாறன். "வணக்கம்' சொல்லிவிட்டு "சாரி' என்று சொல்லிவிட்டாராம் டாப்ஸி. "ஹிந்தியில் பயங்கர பிஸி. இவ்வளவு நாள் கால்ஷீட் ஒதுக்க முடியாது' என்று காரணம் காட்டிவிட்டாராம். சொந்தமாகப் படம் தயாரிக்க ரெடியாகும் டாப்ஸியின் கால்ஷீட் இப்போது மும்பைக்காரர்களுக்கே கிடைப்பதில்லை. ஷாருக்கான் } ராஜ்குமார் ஹிரானி படத்திலும் நாயகி அவரே! அவர் தொட்டது எல்லாம் துலங்குவது ஒரு காரணம் என்கிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்!

தஞ்சாவூர் பெரிய கோயில் தேரோட்டம் கோலாகலம்!

நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!

வீட்டின் தரை மார்பிள் கல்லாக இருந்தால் தனிக்கவனம் அவசியம்!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


