சிரஞ்சீவி - மோகன்ராஜா கூட்டணியில் உருவாகி வரும் படம் காட் ஃபாதர். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விடியோ, ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. அரசியலில் இருந்து விலகி விட்ட சிரஞ்சீவி மீண்டும் அரசியல் ஆரூடம் சொல்லுவது போல் இந்த கதைக் களம் அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தனது அடுத்த தயாரிப்பாக கேப்டன் மில்லர் என்ற படத்தை அறிவித்துள்ளது. "ராக்கி', "சாணி காயிதம்' படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கும் இந்தப் படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடிக்கிறார். 1930-40களின் பின்னணியில் எடுக்கப்படும் பீரியட் ஃபிலிமாக உருவாகவுள்ளது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் இப்படம் வெளியாகவுள்ளது.
தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என அடுத்த பான் இந்தியா படமாக உருவாகி வரும் படம் "பனாரஸ்'. ஜெய தீர்த்தா எழுதி இயக்குகிறார். ஜையீத் கான், சோனல் மோன்டோரியோ நடிக்கின்றனர். காசி நகரத்தில் நடக்கும் காதல் கதை இது. தமிழில் பாடல்களை பழனி பாரதி எழுதியிருக்கிறார்.
தீபிகா படுகோன் தற்போது நாக் அஸ்வின் இயக்கத்தில் "புரொஜெக்ட் கே' எனும் படத்தில் பிரபாஸின் ஜோடியாக நடித்து வருகிறார். இப்படத்தில் அமிதாப் பச்சன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் படப்பிடிப்புத் தளத்தில் இருந்த தீபிகா படுகோனுக்குத் திடீரென இதயத்துடிப்பு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அவர் அங்கேயே மயங்கி விழுந்துள்ளார். பின்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் ஓய்வு எடுத்து வருகிறார்.
மீண்டும் படத் தயாரிப்பில் இறங்குகிறார் தனுஷ். அவரது வுண்டர்பார் நிறுவனத்தின் கடைசி தயாரிப்பாக "மாரி 2' வெளியானது. அதற்கு முன் "பவர்பாண்டி', "விஐபி', "தங்கமகன்', "காலா', "வடசென்னை', "அம்மா கணக்கு', "நானும் ரவுடிதான்' உட்படப் பல படங்களைத் தயாரித்திருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சாந்தினி சௌக்கிலிருந்து கடத்தப்பட்ட ஆண் குழந்தை மீட்பு: ஒருவா் கைது

குருகிராம்: இரும்புப் பெட்டிக்குள் விநியோக ஊழியரின் சடலம் - போலீஸாா் விசாரணை

ஐஆா்எஸ் அதிகாரி மகள் கொலை வழக்கில் கைதானவருக்கு 7 நாள்கள் நீதிமன்ற காவல்

புத்துணர்வுக்கு புதிய பயிற்சி!
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


