உட்புறம் மற்றும் வெளிப்புறச் சிகிச்சைகளால் மட்டுமே இந்த அரிப்பை மட்டுப்படுத்தலாம்; குணப்படுத்தலாமா? என்று கேட்டால், உறுதியாகக் கூற இயலாது. காரணம் வயோதிகம். மேற்குறிப்பிட்ட குணங்களின் கழிவை உட்புற வழியாக அகற்றக் கூடிய ஆரக்வதாதிகஷயாம், வில்வாதிகுளிகை, கதிராரிஷ்டம், ஹரித்ராகண்டம், சிலாஜது பற்பம் போன்றவை தரமான மருந்துகள். வெளிப்புறப் பூச்சாக, ஏலாதிகேர தைலம், தூர்வாதி கேரதைலம், நால்பாமராதி தைலம், தினேஷவல்யாதி தைலம் போன்றவற்றில் ஒன்றை மருத்துவர் ஆலோசனைப்படி பயன்படுத்தலாம். குளிக்கும் தண்ணீரில் வேப்பம்பட்டை, சரக்கொன்றைப்பட்டை, ஏழிலம்பாலைப்பட்டை, புங்கம்பட்டை, ஆலம்பட்டை, அரசம்பட்டை, அத்தி, இச்சிப்பட்டை ஆகியவற்றில் ஒன்றிரண்டைப் போட்டு பெருந்தூளாக தண்ணீருடன் நன்கு காய்ச்சி வடிகட்டி, அது கொண்டு குளிப்பதும் நல்லதே. தலையிலுள்ள சில நுண்ணிய நரம்புகளின் தூண்டுதலின் வழியாக ஏற்படக் கூடிய ரசாயனிகள் மூலமாகவும் உடலரிப்பு ஏற்படலாம் என்பதால் தலைக்கு மூலிகைத் தைலமாகிய அய்யப்பாலா கேர தைலம், ஆரண்யதுளஸ்யாதி தைலம் போன்றவற்றைத் தேய்த்து குணம் காண முயற்சிக்கலாம்.