என் வயது 25. ஒரு நாளைக்கு அடக்க முடியாத அளவிற்கு கொட்டாவி வருகிறது. இது எதனால் உண்டாகிறது. இதைத் தடுக்க ஆயுர்வேதத்தில் ஏதேனும் மருந்து உண்டா?
அனு அஞ்சனா, பழனி.
மூளையின் எல்லையற்ற சக்தியானது அங்குள்ள நரம்புகள் மற்றும் ரசாயனிகளால் வலுப்பெறப்படுகிறது. அதிக சிந்தனை அல்லது ஒரு செயலில் ஏற்படும் அதிக சிரத்தையின் மூலமாக மூளைப் பகுதியில் ஏற்படும் பிராண சக்தியின் குறைவும், கரியமில வாயுவின் தேக்கமும் காரணமாக அதிகமான கொட்டாவியை மூளையே ஏற்படுத்தி பிராண சக்திக்கான வரவை அதிகப்படுத்திக் கொள்வதற்கான ஓர் ஏற்பாடே கொட்டாவி எனலாம். பிராண சக்தியை மூளை பெறுவதன் மூலமாக மூளையானது குளிர்ச்சியடைகிறது. கரியமில வாயுவின் தேக்கமும் வெளியேறுகிறது. பிராணசக்தியைப் பெறுவதற்கான பல வழிகளில் ஒரு சிறந்த வழியாக காலை நேரத்தில் சுறுசுறுப்புடன் உடலில் மேற்பகுதி சிறிது முன்புறம் சாய்ந்தவாறு சிறிது தூரம் நிமிர்ந்து நடை பழகுவது நல்லது. காலை நேரத்துத் தூய காற்றும் சூழ்நிலையும் மிகவும் இதமானது. நுரையீரல் முழு அளவு விரிந்து சுருங்கும் தன்மையிழந்து மேலெழுந்தவாரியாக கால் பங்கு கூட நிறையாமல் மூச்சு இழுத்து விடும் நபர்களுக்கு இந்த மூளைப் பகுதியில் களைப்பும், பெருமூச்சும் ஏற்படும். அதனால் பிராண சக்தியை நிரம்பப் பெற காலை நடை மிகவும் உதவும். பெருநடையாக மூச்சுத் திணறலின்றி நடக்குமளவிற்கு நடந்தால் போதுமானது. உடலை மிகவும் வருத்தாமல் உற்சாகத்துடன் நடை பயிலுவது ஆயுள், பலம், மேதை, ஜீரணசக்தி, கண்-காது முதலியவற்றின் கூர்மை ஆகியவற்றை அளிக்கவல்லது.
தொண்டை க்ரந்தி வீக்கம் எனப்படும் தைராய்டு உபாதையில் அதிகக் கொட்டாவி வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. அதற்கான பிரத்யேக சிகிச்சைகளை ஆயுர்வேத மருத்துவரின் உபதேசப்படி செய்து கொள்வது நல்லது. அதிக கொட்டாவியைத் தவிர்க்கவும், தலையில் உள்ள ஐம்புலன்களையும் பாதுகாக்கவும் ஒருசில ஆயுர்வேத சிகிச்சைமுறைகள் உங்களுக்கு நல்ல பலனைத் தரலாம்.
நயனாம்ருதம் எனும் கண்சொட்டு மருந்தை தினமும் காலையில் கண்ணிலிட்டு கண்களை மூடி சிறிது நேரம் பொறுத்திருந்து பிறகு தண்ணீரில் நனைத்த பஞ்சால் கண்களைத் துடைத்துவிட்டுக் கொள்வது கண்கள் அழகாக காட்சி தருவதற்கும், தெள்ளிய பார்வை பெறுவதற்கும் உதவும். நெருக்கமுடன் நெய்ப்புடன் இமைகள் வழவழவென்றிருக்கும்.
இரண்டாவதாக, அணு தைலம் என்ற ரசாயனக் கல்பமாக உள்ள தைலம் ஆயுர்வேத முறையில் பிரசித்தம். மூளை நரம்புகளுக்கு வலிவு தர மிகச் சிறந்தது. காலையிலும் இரவு தூங்கும் முன்னும் மல்லாந்து தலையணையின்றி படுத்து தலையை சிறிது மேலெழுமாறு வைத்துக் கொண்டு மூக்குத் துவாரங்களில் இரண்டு சொட்டு விட்டு நன்கு உறிஞ்சி நெற்றி, மூக்கின் இருபுறங்கள், மென்னி இவற்றை அழுத்தி தேய்த்துவிட்டுக் கொள்ள வேண்டும். முகம் நல்ல மழமழப்பு, பூரிப்பு, நித்திய யொவனத்தைக் காட்டும். தலையிலுள்ள இரத்தக் குழாய்கள் அடைபடாது மூளை தளர்ச்சியுறாமல் பாதுகாக்கக் கூடியது. அரிமேதஸ் எனும் தைலத்தை வாயினுள் விட்டுக் கொப்பளிப்பதால் வாய்ப் பகுதி சுத்தமாவதுடன் பற்கள் வலுப்பெறும். நாக்கின் சுவைக் கோளங்கள் நன்கு செயல்படும். மூளைக்கு இரத்த ஓட்டத்தைச் சீராக்கித் தரும்.
வசாலஸூனாதி எனும் தைலத்தை நான்கைந்து சொட்டுகள் காதினுள் விட்டு வர மூளை மற்றும் காதிலுள்ள நுட்பமான நரம்புகளில் வாயுவின் வறட்சி ஏற்படாமல் வலிவூட்டும். க்ஷீரபலா எனப்படும் தைலத்தை வெதுவெதுப்பாக தலைக்குத் தேய்த்துக் குளிப்பதால் மூளை நரம்புகள் வலுப்படும். இவை ஐந்தும் புலன்களின் வழியாக மூளையைச் சுறுசுறுப்பாக்கி அதிகக் கொட்டாவியைத் தவிர்க்க உதவிடும் சில எளிய கை வைத்திய முறைகளாகும்.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
இன்றைய ராசி பலன் (24.04.2026) - மகரம்
இன்றைய ராசி பலன் (24.04.2026) - மிதுனம்
இன்றைய ராசி பலன் (24.04.2026) - மேஷம்
இன்றைய ராசி பலன் (24.04.2026) - விருச்சிகம்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


