டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

ஆயுள் காக்கும் ஆயுர் வேதம்: மார்பக கட்டிக்கு என்ன மருத்துவம்?

மார்பக கட்டி ஏற்படுவதற்கான காரணங்களை ஆயுர்வேதம் விரிவாக எடுத்துக் கூறுகிறது. இரத்தத்தை கெடுக்கும் பழையது, ம

News image
Updated On :5 ஜனவரி 2024, 5:32 am

எஸ். சுவாமிநாதன்

42 வயதான என் தோழிக்கு மார்பில் கட்டி ஏற்பட்டுள்ளது. சோதனையில் அது Fibro adenoma என்று சொன்னார்கள். இது எதனால் ஏற்படுகிறது. இதற்கான தீர்வு ஆயுர்வேதத்தில் உள்ளதா?

ஊர், பெயர் வெளியிடவிரும்பாத வாசகி.

மார்பக கட்டி ஏற்படுவதற்கான காரணங்களை ஆயுர்வேதம் விரிவாக எடுத்துக் கூறுகிறது. இரத்தத்தை கெடுக்கும் பழையது, மிகவும் சூடானது, வறண்டது, காய்ந்தது, நெஞ்செரிவு உண்டாக்கக் கூடிய எண்ணெய், புண்ணாக்கு, கொள்ளு, கடுகு, மீன், உடும்பு மாமிசம், ஆடு, செம்மறி ஆட்டு மாமிசம், தயிர், மோர், திரிந்த மோர், தயிர்த் தெளிவு, புளிப்புப் பழங்கள் மற்றும் காரம், புளி, உப்பு சுவைகளைக் கொண்ட உணவுகளை அதிகம்  உட்கொள்வதாலும், வெண்ணெய், ஊடுருவி சூட்டைக் கிளப்பும் எரிச்சலைத் தரும் லேசான உணவுப்பொருட்கள், அஜீரணத்தைத் தோற்றுவிக்கும் எளிதில் செரிக்காத உணவுப் பண்டங்கள்,  ஒவ்வாமை உணவுவகைகள், பகல் தூக்கம், நெருப்பின் அருகில் அமர்தல், வெயில், சோர்வு, அடிபடுதல், ஒழுங்கற்ற படுக்கை, செயல்கள் இவற்றாலும் சினம், வருத்தம், அச்சம், பட்டினி கிடத்தல், உடலை அதிகம் வருத்திக் கொள்ளும் செயல்கள், அழற்சி போன்றவற்றால் கேடடைந்த சருமம், மாமிசம், கொழுப்பு, எலும்பு, தசைநார், ரத்தம் கண்டரைத் தளைகள் இவற்றை ஆதாரமாகக் கொண்டு உண்டாகும் வீக்கம் நீங்கள் குறிப்பிடும் மார்பு கட்டிக்கு காரணமாகலாம்.

மேற்குறிப்பிட்ட காரணங்களால் பெண்களின் விரிவடைந்த மார்பக இரத்தக் குழாய்களில் புகுந்து மேற்புறம் உண்டாகும் கட்டியானது பாரமான வீக்கத்தை உண்டாக்கும். தோஷங்களின் தொடர்பின்றி இரத்தம் சீற்றம் பெருவதில்லை. ஆகவே எந்த நேரத்தில் எந்த தோஷமாகிய வாத-பித்த-கபம் சீற்றமுறுமோ அந்த நேரத்தில் அத்துடன் இரத்தமும் சேர்ந்து சீற்றம் கொண்டதாக இருக்கும். அதனால் உங்கள் தோழிக்கு தோஷத்தின் சீற்றமுற்றநிலை. அது மார்புகட்டியில் இரத்தத்துடன் கேடடைந்து கலந்து நிற்கும் தன்மை ஆகியவற்றை மனதிற்கொண்டு சிகிச்சை செய்யவேண்டிய அவசியம் இருக்கிறது.

வாத மார்பக கட்டியில் தீவிரமான வலி, இளங்கருப்பு, இளஞ்சிவப்பு தோன்றுதல், பலவாறாகப் பழுத்தல், சமமற்ற உருவம், குத்துதல், வெட்டுதல் போன்ற வலி காணும்.

பித்த மார்பகக் கட்டியில் சிவப்பு, தாமிரம், கருப்பு ஆகிய நிறம், மாதவிடாய், மோகம், காய்ச்சல், எரிச்சல் ஆகியவைக் காணப்படும். விரைவில் பழுக்கும்.

கபத்தினால் ஏற்படும் மார்பக கட்டியில் வெந்நிறம், அரிப்பு, கிளர்ச்சி, குளிர்காய்ச்சல், விரைப்பு, கொட்டாவி, ருசியின்மை, உடல் பாரம், ஆகியவை காணப்படும். கட்டி மிகத் தாமதமாக உண்டாகிப் பழுக்கும்.

ஆயுர்வேத மருந்துகளாகிய வருணாதி க்ருதம்

மார்பக கட்டி பழுக்காத நிலையில் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதற்கு ஏற்ற மருந்தாகும். ஆசனவாய் வழியாகச் செலுத்தப்படும் கஷாய வஸ்தி மற்றும் எண்ணெய் வஸ்தி ஆகியவையும் நல்ல சிகிச்சைமுறைகளே. செம்முருங்கையை நம் முன்னோர் பானம்,  உணவு, பூச்சு ஆகிய வகைகளில் உபயோகித்து மார்பக கட்டியை குணமடையச் செய்ததாக அஷ்டாங்க ஹ்ருதயம் எனும் ஆயுர்வேத நூல் கூறுகிறது. காராமணியை உணவில் சற்று அதிகம் சேர்த்துக் கொள்வதும் நல்ல பலனைத் தருவதாகக் கூறப்படுகிறது.  அதுபோல குக்கில் எனப்படும் குக்குலு இதுபோன்ற உபாதைகளில் நல்லதொரு மருந்தாகக் கண்டறியப்பட்டுள்ளது.

சுகுமாரக்ருதம் எனும் ஆயுர்வேத மூலிகை நெய் மருந்தும் இந்த உபாதையில் சாப்பிடவேண்டிய நல்ல மருந்து. மாலை வேளைகளில் வெறும் வயிற்றில் இதனைச் சாப்பிட்டு வரலாம். முன் குறிப்பிட்ட வருணாதி க்ருதம் இந்த சுகுமார க்ருதத்துடன் கலந்து சாப்பிடக்கூடிய நிலைகளும் உண்டு. மருத்துவரின் ஆலோசனைப்படி இவற்றை எத்தனை நாட்களுக்குச் சாப்பிடவேண்டும், எப்படிச் சாப்பிட வேண்டும் என்பனவற்றை அறிந்து சாப்பிடுவதே நல்லது. சிலாசத்து எனப்படும் மருந்தும் இதுபோன்ற மார்பக கட்டிகளுக்குப் பயன்படுத்தக்கூடியதே. உட்புற கட்டிகளை உடைத்து அவற்றை வெளியேற்றும் சக்தியை இந்த சிலாசத்து பெற்றிருப்பதால் அதையும் மேற்குறிப்பிட்ட நெய் மருந்துகளுடன் உணவிற்குப் பிறகு சாப்பிட்டு வரலாம்.  மாதவிடாயை ஏற்படுத்தும் சுரப்பிகளின் சீரான செயல்பாடுகள் இல்லாமற் போனால் இந்த உபாதை பெண்களுக்கு பொதுவாக ஏற்படும் என்ற ஒரு கருத்தும் கூறப்படுகிறது. அதனால் சுரப்பிகளின் செயல்பாடுகளில் ஏற்படும் தொய்வுகளை உடனுக்குடன் சரி செய்து கொள்வதும் நல்லதே.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.