திரைக்கதிர்
தமிழிலும் தெலுங்கிலும் முன்னணி நாயகியாக வலம் வந்துகொண்டிருக்கும் ஹன்சிகா விலையுயர்ந்த பி.எம்.டபுள்யூ காரை வாங்கியிருக்கிறார். "சிறு வயதிலிருந்தே பி.எம்.டபுள்யூ கார் மீது எனக்கு தீராத காதல். எப்படியாவத


தமிழிலும் தெலுங்கிலும் முன்னணி நாயகியாக வலம் வந்துகொண்டிருக்கும் ஹன்சிகா விலையுயர்ந்த பி.எம்.டபுள்யூ காரை வாங்கியிருக்கிறார். "சிறு வயதிலிருந்தே பி.எம்.டபுள்யூ கார் மீது எனக்கு தீராத காதல். எப்படியாவது அந்தக் காரை வாங்கிவிட வேண்டும் என்று கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தீவிரமாக உழைத்தேன். அதன்படி காரையும் வாங்கிவிட்டேன். ஷோ ரூமிலிருந்து காரை வெளியே எடுத்து அதை நானே கோயிலுக்கு ஓட்டிச் சென்று பூஜை செய்துவிட்டு வந்தேன்' என்று கூறும் ஹன்சிகா தன்னுடைய சம்பளத்தை ரூ.70 லட்சமாக உயர்த்தியிருக்கிறார்.
"நெஞ்சில் ஒரு முள்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி ஏராளமான வெற்றிப் படங்களில் நடித்தவர் பூர்ணிமா பாக்யராஜ். கடைசியாக பிரபுவுடன் "உங்கள் வீட்டு பிள்ளை' படத்தில் நடித்த அவர், மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு "ஆதலால் காதல் செய்வீர்' படத்தில் நடிக்கிறார். சுசீந்திரன் இயக்கும் இந்தப் படத்துக்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.
ராசு மதுரவன் இயக்கி வரும் "மைக் செட் பாண்டி' படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார் சுனேனா. நீண்ட இடைவெளிக்குப் பிறகு கிடைத்துள்ள வாய்ப்பு என்பதால் அதைத் தக்க வைக்க படத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு கிளாமராக நடித்திருக்கிறார். படம் ஹிட் ஆனால் தொடர்ந்து கிளாமர் வேடங்களிலேயே நடிப்பேன் என்று கூறும் சுனேனா, இந்தப் படத்தின் சில காட்சிகளில் நரை முடியுடன் வயதான "கெட்-அப்'பில் தோன்றி நடிப்பிலும் அசத்தியுள்ளாராம்.
தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் தேஜாவின் திருமணம் ஹைதராபாத்தில் ஜூன்
14-ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி நடைபெறும் மூன்று நாள் திருமண சடங்குகளில் நடிகர், நடிகைகளின் நடன நிகழ்ச்சியும் இடம்பெறுகிறது. இதில் தமன்னா, ஸ்ரேயா, அல்லு அர்ஜுன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்துகொள்கிறார்கள். இதற்காகத் தமன்னாவுக்கும் ஸ்ரேயாவுக்கும் கணிசமான தொகை தரப்படுகிறது.
அஜித் நடித்த "வரலாறு' படம் கன்னடத்தில் "காட்
ஃபாதர்' என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. உபேந்திரா கதாநாயகனாக நடிக்கிறார். இதற்காக ஏற்கெனவே இடம்பெற்றிருந்த பாடல்களைத் தவிர்த்து இரண்டு பாடல்களையும் பின்னணி இசையில் சில மாற்றங்களையும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானிடம் கேட்டிருக்கிறார் உபேந்திரா. இசைப் புயலும் அவ்வாறே செய்திருக்கிறார். இதற்காக மட்டும் அவருக்கு ரூ.1.50 கோடி சம்பளம் தரப்பட்டுள்ளது.
எஸ்.ஜே.சூர்யா இயக்கி இசையமைத்து நடிக்கும் "இசை' படம் பல சர்ச்சைகளை உருவாக்கும் எனத் தெரிகிறது. ஒரு முன்னணி இசையமைப்பாளரால் அவமானப்படுத்தப்படும் இளம் இசையமைப்பாளரைப் பற்றிய கதை. தனக்கு நேர்ந்த சம்பவங்கள் போல இருப்பதால் இந்தப் படத்துக்கு நான் இசையமைத்தால் தவறாகி விடும் எனக் கூறி இசைப்புயல் இசையமைக்க மறுத்துவிட்டாராம். மேலும் இந்தப் படத்துக்கு ஏன் நீங்களே இசையமைக்கக் கூடாது? எனக் கூறியிருக்கிறார். அதன் பிறகே படத்தின் இசைப் பொறுப்பையும் ஏற்றிருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா.
மணிரத்னம் இயக்கி வரும் "கடல்' படத்தில் கார்த்திக் மகன் கெüதம் மீனவர் வேடத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தின் சில முக்கியக் காட்சிகளில் மட்டும் நடிக்க நயன்தாராவை அழைத்திருக்கிறார் மணிரத்னம். எப்படியாவது கால்ஷீட் ஒதுக்கி நடிக்கிறேன் என உறுதியளித்திருக்கிறாராம் நயன்தாரா.
"சுப்பிரமணியபுரம்', "நாடோடிகள்' படங்களில் வித்தியாசமான வேடங்களில் நடித்த இயக்குநர் சசிகுமார் "போராளி' படத்தில் ஆக்ஷன் ஹீரோவாக நடித்தார். படம் நல்ல வரவேற்பைப் பெறவே "சுந்தரபாண்டியன்' படத்தில் மீண்டும் ஆக்ஷன் ஹீரோவாக நடிக்கிறார். இந்தப் படத்தை சசிகுமாரின் உதவியாளர் எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்குகிறார். பிரபுசாலமன் இயக்கி வரும் "கும்கி' படத்தின் நாயகி லட்சுமி மேனன் கதாநாயகியாக நடிக்கிறார்.
"காதலில் விழுந்தேன்' படத்தை இயக்கிய பி.வி.பிரசாத் அடுத்து இயக்கியுள்ள படம் "எப்படி மனசுக்குள் வந்தாய்'. இதில் மிஸ் ஃபெமினா பட்டம் வென்ற தன்வி வியாஸ் கதாநாயகியாக அறிமுகமாகிறார். "காதலில் விழுந்தேன்' படத்தின் "நாக்க முக்க...' பாடல் போல இதில் "ஊறாக்காளி...' என்ற "ஐயிட்டம் சாங்' இடம்பெற்றுள்ளது. ஹாரிஸ் ஜெயராஜிடம் பத்து ஆண்டுகளாக உதவியாளராக இருந்த ஏ.ஜே.டேனியல் இந்தப் படத்தின் மூலம் இசையமைப்பாளர் ஆகியிருக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...