பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

திரைக்கதிர்

இன்றைய தேதியில் உலகிலேயே அதிகச் சம்பளம் பெறும் நடிகை என்ற பெயரைப் பெற்றிருக்கிறார் கொலம்பியாவைச் சேர்ந்த சோஃபியா வெர்கரா. "மாடர்ன் ஃபேமிலி' என்ற டி.வி. தொடர் மூலம் உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்களைக்

News image
Updated On :2 ஜனவரி 2024, 6:17 pm

மனோஜ் கிருஷ்ணா

இன்றைய தேதியில் உலகிலேயே அதிகச் சம்பளம் பெறும் நடிகை என்ற பெயரைப் பெற்றிருக்கிறார் கொலம்பியாவைச் சேர்ந்த சோஃபியா வெர்கரா. "மாடர்ன் ஃபேமிலி' என்ற டி.வி. தொடர் மூலம் உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்களைக் கவர்ந்த சோஃபியாவின் வருமானம், 2011 முதல் 2012 ஜூன் வரையிலான காலகட்டத்தில் 19 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என ஃபோர்ப்ஸ் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது. இது தவிர கருத்துக்கணிப்பு ஒன்றில் "ஆண்களால் அதிகம் விரும்பப்படும் அழகி' என்ற சிறப்பையும் பெற்றிருக்கிறார்... இருபத்து இரண்டு வயது இளம்பெண் போல தோற்றமளிக்கும் இந்த 40 வயது நடிகை.

தனது பெற்றோருடன் அண்மையில் அமெரிக்காவுக்குச் சென்றார் அமலாபால். தங்களது உறவினர்களைச் சந்திக்கவும் ஓய்வெடுப்பதற்காகவும்தான் அங்கு சென்றதாக அமலாபால் கூறி வருகிறார். ஆனால் ஹேர் ஸ்டைலை மாற்றுவதற்காகவும் மேனி எழிலைக் கூட்டுவதற்காக சிறிய அளவில் சிலிகான் சர்ஜரி செய்வதற்காகவும்தான் அமெரிக்கா சென்றதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தனது ஒவ்வொரு படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த பிறகு, கேரளத்தில் உள்ள குருகிரிப்பா ஹெரிட்டேஜ் ஆயுர்வேத ஆசிரமத்தில் ஒரு மாதம் தங்கி சிகிச்சை மேற்கொண்ட பிறகே அடுத்த பட வேலைகளைத் தொடங்குவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார் மோகன்லால்.

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ஒட்டிப் பிறந்த இரட்டையர்களாக அகிலன், விமலன் என்ற கதாபாத்திரங்களில் - சூர்யா இரு வேடங்களில் நடிக்கும் "மாற்றான்' திரைப்படம் இதுவரை எடுக்கப்பட்ட இந்தியத் திரைப்படங்களில் தொழில்நுட்பத்தின் உச்சம் தொட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இரட்டை வேடங்களில் நடிக்க சுமார் 2000 தடவைக்கு மேல் சூர்யா மாறி மாறி நடித்திருக்கிறாராம். ஙஹழ்ண்ஹ ச்ன்ப்ப் ர்ச் எழ்ஹஸ்ரீங் படத்தைத் தழுவி "அயன்' படத்தையும் நற்ஹற்ங் ர்ச் ல்ப்ஹஹ் படத்தைத் தழுவி "கோ' படத்தையும் கொடுத்த கே.வி.ஆனந்த், நற்ன்ஸ்ரீந் ர்ய் ஹ்ர்ன் என்ற காமெடி படத்தைத் தழுவி "மாற்றான்' படத்தை உருவாக்கியிருக்கிறார். தழுவல்கள் என்றாலும் "அயன்', "கோ' படங்களைத் தமிழுக்கு ஏற்றவாறு சுவாரஸ்யமாகக் காட்டியதில் வெற்றி கண்டதால் "மாற்றான்' படத்தின் ஒட்டுமொத்த வியாபாரமும் ரூ.80 கோடியைத் தாண்டியுள்ளது.

"என் தங்கம், என் உரிமை' என விளம்பரப் படமொன்றில் புரட்சிப் போராட்டம் நடத்தி வரும் பிரபுவுக்கு ஒரு மிகப் பெரிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்தியாவின் பிரபலமான ஜுவல்லரி நிறுவனத்தின் விளம்பரப் படத்தில் அமிதாப் பச்சனுடன் இணைந்து நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

விஜய் இயக்கத்தில் விக்ரம், அனுஷ்கா, எமி ஜாக்ஸன் நடித்துள்ள "தாண்டவம்' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டது. இந்தப் படத்தில் சொந்தக் குரலில் தமிழில் டப்பிங் பேச விரும்பிய எமி ஜாக்ஸன், அதற்காக ஒரு தமிழாசிரியரை நியமித்து தீவிரமாக தமிழ் கற்று வருகிறார்.

சீனுராமசாமி இயக்கத்தில் விஷ்ணு, சுனேனா நடித்து வரும் "நீர்ப்பறவை' படத்துக்காக விவிலிய வரிகளிலிருந்து "தேவன் மகளே தேவன் மகளே, சிலுவைக்காடு பூத்தது போல சிறியேன் வாழ்வைப் பூக்க வைத்தாயே...' என்ற பாடலை எழுதியிருக்கிறார் வைரமுத்து. இந்தப் பாடலை ரகுநந்தன் இசையில் பிரசன்னா, சைந்தவி ஆகியோர் பாடியுள்ளனர். இதுவரை வெளிவந்த தமிழ்த் திரைப்படங்களிலேயே அதிக முத்தக் காட்சிகள் இடம்பெற்றுள்ள பாடல் இது என்பதுதான் இதன் சிறப்பம்சம்.

"இதயம்', "காதல் தேசம்', "காதலர் தினம்' உள்ளிட்ட மியூசிக்கல் ஹிட் படங்களைக் கொடுத்த இயக்குநர் கதிர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு "கோடை விடுமுறை' என்ற படத்தை இயக்குகிறார். ஷாம் கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்துக்காக இளமை துள்ளும் பாடல்களை எழுதியிருக்கிறார் வாலி. புதியவர் பிரசன்னா இசையமைக்கிறார்.

சரத்குமார் நடித்த "அரவிந்தன்' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான யுவன்ஷங்கர்ராஜா தனது இசையுலக வாழ்வில் முக்கியமான மைல் கல்லைத் தொடவுள்ளார். வெங்கட்பிரபு இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் "பிரயாணி', யுவன் இசையமைக்கும் நூறாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் பேரி ஆஸ்போர்ன் தயாரிக்கும் ஹாலிவுட் படத்தில் கதை எழுதி நடிக்கிறார் கமல்ஹாசன். இந்தப் படத்தின் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க வைப்பதற்காக குழந்தைத்தனமும் குறும்புத்தனமும் நிறைந்த ஏழு வயது சிறுமியைத் தேடி வருகிறார் கமல்ஹாசன்.

தேசத்தந்தை காந்தியடிகளைச் சுட்டுக் கொன்ற கோட்சேயின் வாழ்க்கை வரலாறு மலையாளத்தில் திரைப்படமாகிறது. பிரபல இயக்குநர் ஷாஜி கைலாஸ் இயக்கும் இந்தப் படத்தில் பிருத்விராஜ், கோட்சேவாக நடிக்கிறார். காந்தியைக் கொல்வது என முடிவெடுத்துவிட்ட கோட்சே, அந்த கொடூரமான குற்றச் செயலை நிகழ்த்துவதற்கு முதல் நாள் படும் அவஸ்தை, மனப்போராட்டம் ஆகியவற்றுக்கே அதிக முக்கியத்துவம் அளித்து இந்தப் படத்தை உருவாக்குகிறோம் என்கிறார் ஷாஜி கைலாஸ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.