மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பாதுகாப்பான தீபாவளி!

பட்டாசு வெடிப்பதற்கு முன் கவனிக்க வேண்டியவை: பட்டாசு கொளுத்தும்போது இறுக்கமான ஆடைகளை அணியுங்கள்.  முடிந்தவரை பருத்தி ஆடைகளை அணியுங்கள். பெரியவர்கள் மேற்பார்வையிலேயே குழந்தைகள் பட்டாசு வெடிக்க வேண்டும்

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 5:07 pm
  • பட்டாசு வெடிப்பதற்கு முன் கவனிக்க வேண்டியவை:
  • பட்டாசு கொளுத்தும்போது இறுக்கமான ஆடைகளை அணியுங்கள்.  முடிந்தவரை பருத்தி ஆடைகளை அணியுங்கள்.
  • பெரியவர்கள் மேற்பார்வையிலேயே குழந்தைகள் பட்டாசு வெடிக்க வேண்டும்.
  • சட்டைப் பையில் பட்டாசுகளை வைத்துக்கொண்டு வெடிக்கக் கூடாது.
  • வெடிக்காத பட்டாசுகளை எக்காரணத்தைக் கொண்டும் கையில் எடுக்கக்கூடாது.
  • பட்டாசுகளை வீட்டிற்கு வெளியில்தான் வெடிக்க வேண்டும்.காலியான மைதானத்தில் வெடிப்பது கூடுதல் பாதுகாப்பு.
  • ராக்கெட் போன்ற வாணவேடிக்கைகளைக் குடிசைகள் இல்லாத திறந்தவெளியில் வெடிக்கவும்.
  • வெடிகளை டின், பாட்டில் போன்றவற்றில் வைத்து வெடிக்காதீர்கள்.
  • ஒரு வாளி நீரை எப்போதும் பக்கத்தில் வைத்துக்கொண்டேதான் பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.
  • எல்லாப் பட்டாசுகளையும் நீண்ட வத்தியாலேயே கொளுத்தி வெடிக்க வேண்டும்.
  • எதிர்பாராத விதமாக உங்கள் மேல் தீப்பிடித்துக் கொண்டால் ஓடாதீர்கள்.  உடனே தண்ணீர் ஊற்றி அணையுங்கள்  அல்லது கீழே படுத்து உருளுங்கள்.
  • தீப்புண்ணுக்கு உடனே தண்ணீர் ஊற்றுங்கள்.  இங்க், எண்ணெய் போன்றவற்றை பயன்படுத்தாதீர்கள்.  உடனடியாக மருத்துவரிடம் செல்லுங்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.