அக்ரமும் இல்லை...அக்கப்போரும் இல்லை!
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் வாசிம் அக்ரம், உலக அழகி சுஷ்மிதா சென் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்தனர். திடீரென இவர்களின் காதல் முடிவுக்கு வந்து விட்டதாக கூறப்படுகிறது. சுஷ்மிதா சென்னின் பல படங்களைப்


பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் வாசிம் அக்ரம், உலக அழகி சுஷ்மிதா சென் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்தனர். திடீரென இவர்களின் காதல் முடிவுக்கு வந்து விட்டதாக கூறப்படுகிறது. சுஷ்மிதா சென்னின் பல படங்களைப் பார்த்து ரசித்த வாசிம் அக்ரமுக்கு அவர் மீது காதல் ஏற்பட்டது.
சில மாதங்களுக்கு முன் அக்ரம் இந்தியா வந்த போது, தனது காதலையும் வெளிப்படுத்தி இருக்கிறார். அக்ரமின் காதலை சுஷ்மிதாவும் ஏற்றுக் கொண்டார். இதையடுத்து அடுத்த ஆண்டு இருவரும் திருமணம் செய்துக் கொள்ள முடிவு செய்திருந்தனர். திருமணத்துக்குப் பின் பாகிஸ்தானில் குடும்பம் நடத்த சுஷ்மிதா மறுத்துள்ளார். இதையடுத்து துபாயில் குடியேறலாம் என அக்ரம் கூறியிருக்கிறார். அதற்கு சுஷ்மிதா ஒப்புக் கொண்டார்.
இதற்கிடையே இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் இப்போது காதல் முடிவுக்கு வந்துள்ளது. இதற்கு இந்தியாவின் கிரிக்கெட் நட்சத்திரம் ஒருவர் காரணம் எனக் கூறப்படுகிறது. அவருடன் சுஷ்மிதாவுக்கு ஏற்பட்ட நெருக்கம் காரணமாக அக்ரம் கோபத்தில் இருந்திருக்கிறார். இதையடுத்து ஏற்பட்ட தகராறு அவர்களின் காதலைப் பிரித்து வைத்திருக்கிறது. இதுபற்றி டிவிட்டர் இணையத்தில் ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு ""முன்பு நான் தனியாக இருந்தேன். இப்போதும் தனியாகத்தான் இருக்கிறேன். அக்ரமுடன் காதல் முறிவு பற்றி எதுவும் கூற விரும்பவில்லை"' என்று பதில் அளித்திருக்கிறார் சுஷ்மிதா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...