மலைகள், ஆட்டுமந்தை, பூக்கள், கனிகள், கிராமியச்சூழல் என யதார்த்தமான இயற்கை சார்ந்த பல்வேறு விஷயங்களை அழகு ததும்ப படம்பிடித்து கலக்கியுள்ளார் சரவணாச்சாரி.
விலை உயர்ந்த காமிராக்களைப் பயன்படுத்தி நவீன தரத்தில் எடுக்கப்படும் படங்களுடன் போட்டியிடும் வகையில் செல்போன் காமிராவில் இவர் எடுத்த படங்கள் மிளிர்கின்றன. நவீன அறிவியல் கண்டுபிடிப்புகளை நல்ல விஷயங்களுக்காக பல வகைகளிலும் பயன்படுத்தலாம் என்பதற்கு நம்பிக்கை வெளிச்சம் பாய்ச்சியிருக்கிறார்.
மனிதர்களின் உடலுடன் ஒட்டிப்பிறக்காத கவச குண்டலம்போல் இன்றைக்கு விளங்கும் தொலைத் தொடர்புக் கருவியான செல்போன் மூலம் ஆயிரக்கணக்கான படங்களைச் "சுட்டுத்தள்ளி' இந்தியாவிலேயே முதன் முறையாக செல்போன் புகைப்படக் கண்காட்சியை மதுரையில் அண்மையில் நடத்திக் காட்டியுள்ள இந்த இளைஞரிடம் பேசினோம்...
""எனக்கு சிறுவயதிலேயே இளம்பிள்ளை வாதம் காரணமாக இரு கால்களும் பாதிக்கப்பட்டன. பள்ளிப் படிப்பில் ஆர்வம் இல்லாததால் 10-ம் வகுப்புக்கு மேல் படிப்பைத் தொடரவில்லை. தெரிந்த உறவினரின் நகைப் பட்டறையில் சில ஆண்டுகள் வேலை செய்தேன். அதேவேளை, உலக விஷயங்களைப் பற்றி அறிந்துகொள்வதில் எனக்கிருந்த நாட்டம் குறையவில்லை. பள்ளிப் பருவத்திலேயே ஓவியம் வரைவதில் இயற்கையாகவே ஆர்வம் இருந்தது.
இதன் காரணமாக மாற்றுத் திறன் படைத்தோருக்கான பல்வேறு ஓவியப் போட்டிகளில் பங்கேற்றேன். தேசிய அளவில் மாற்றுத்திறன் படைத்தோருக்கான ஓவியக் கண்காட்சியில் கலந்துகொண்டு 4 முறை விருது பெற்றுள்ளேன். சர்வதேச அளவிலான போட்டியில் ஒரு முறை தங்கப்பதக்கமும், விருதும் பெற்றுள்ளேன்.
கடந்த 1999-ல் "தூரிகை ஆர்ட் காலரி' என்ற மையத்தைத் தொடங்கி ஆயில் பெயிண்டிங், வாட்டர்கலர் பெயிண்டிங், மாடர்ன் ஓவியம் என பலதரப்பட்ட ஓவியங்களை வரைந்தேன்.
நான் வரையும் ஓவியங்களை நண்பர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் மூலம் விற்று வருகிறேன். எனது ஓவியங்கள் கனடா, ரஷ்யா, பிரான்ஸ் உள்பட ஐரோப்பா நாடுகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. மதுரையில் உள்ள முக்கிய ஹோட்டல்களின் வரவேற்பறையில் எனது ஓவியங்கள் வைக்கப்பட்டுள்ளன.
2006-ம் ஆண்டில் சோனி எரிக்ஸன் நிறுவனத்தின் "கே 750 ஐ' என்ற காமிராவுடன் கூடிய செல்போனை வாங்கினேன். அப்போதே பல்வேறு விதமான புகைப்படங்களை எடுக்க வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் விதையூன்றியது. தொடர்ந்து, மதுரை மற்றும் அதைச் சுற்றியுள்ள பல்வேறு புராதன, கலையம்சமிக்க இடங்களுக்குச் சென்று மாறுபட்ட கோணங்களில் புகைப்படங்களை எனது செல்போன் காமிரா மூலம் "கிளிக்'கினேன்.
தொலைதூரங்களுக்குச் செல்லும்போது எனது உடல்நிலை ஒரு பிரச்னையாக இருந்தபோதிலும் நண்பர்கள் உதவியாலும், ஊக்குவிப்பாலும் நான் மள,மளவென ஆயிரக்கணக்கான படங்களை எடுத்தேன்.
தில்லி, மகாராஷ்டிரம், ஹரியாணா, உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் உள்பட பல்வேறு மாநிலங்களுக்குச் சென்றபோதும் படம் எடுக்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டேன்.
இதன்காரணமாக, சுமார் 3 ஆயிரம் படங்களை எடுக்க முடிந்தது. படம் எடுக்கத் தொடங்கிய காலத்திலேயே "போட்டோ எக்ஸிபிஷன்' நடத்திட வேண்டும் என்று முடிவுசெய்துவிட்டேன். இதை வெளியில் தெரிவித்தால் வேறு யாரும் முந்திக்கொள்வார்கள் என்று நினைத்து மனத்திற்குள் பொத்திவைத்தேன்.
தற்போது, இந்தியாவிலேயே முதன்முறையாக செல்போன் மூலம் புகைப்படம் எடுத்து கண்காட்சி நடத்தியுள்ளேன். இது மனதிற்கு திருப்தியாக இருக்கிறது. நல்ல படங்களை பல லட்சம் காமிரா மூலம்தான் எடுக்கவேண்டும் என்ற அவசியமில்லை. கலைத்திறனும், ஆர்வமும் இருந்தாலே போதும். வெறும் 2 மெகா பிக்ஸல் செல்போன் காமிராவில் என்னைப் போன்று நல்ல படங்களை எடுக்க முடியும்.
70 மெகா பிக்ஸல் காமிராக்களைப் பயன்படுத்தும் திரைப்படத் துறையினர், விரசம் ஏற்படுத்தும் ஆபாச படங்களைத் தவிர்த்து அழகியல் கோணத்தில் நல்ல படங்களைத் தர முடியும்.
ஓவியக் கலை என்பது மனம் உள்வாங்கிய விஷயத்தை அற்புதமாக வெளிப்படுத்தும் விஷயம். இதற்கு நல்ல வரவேற்பு இருக்கத்தான் செய்கிறது. ஆனால், வாய்ப்புகள்தான் உரிய வகையில் ஏற்படுத்தித் தரப்படவில்லை.
மதுரையில் "ரெஸிடென்சியல் ஆர்ட் கேலரி' அமைக்க வேண்டும் என்பதே என் எதிர்காலக் கனவு. அதற்கு பல லட்சம் பணமும், இடமும் தேவை. கலை ஆர்வம் உள்ளவர்கள் உதவிட முன்வந்தால் இதை நான் அமைக்கத் தயாராக உள்ளேன்'' என்று உத்வேகத்துடன் கூறுகிறார் சரவணாச்சாரி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
இன்றைய ராசி பலன் (24.04.2026) - மகரம்
இன்றைய ராசி பலன் (24.04.2026) - மிதுனம்
இன்றைய ராசி பலன் (24.04.2026) - மேஷம்
இன்றைய ராசி பலன் (24.04.2026) - விருச்சிகம்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


