5 மாவட்டங்களுக்கு நாளை ரெட் அலர்ட்! 16 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! வானிலை ஆய்வு மையம்ஆயுதங்களால் மட்டுமே இனி போர் நடக்காது! பொருளாதாரத் தாக்குதல் மோசமானது: பிரதமர் மோடிதிண்டுக்கல்: பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை!சுற்றுலாப் பயணிகள் கவனத்திற்கு...ஏற்காடு பயணத்தைத் தவிர்க்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல்!

அரிவாளுடன் விடியோ வெளியிட்ட இளைஞா் கைது

ராஜபாளையம் அருகே பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அரிவாளுடன் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Updated On :

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அரிவாளுடன் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

ராஜபாளையம் அருகேயுள்ள சேத்தூா் கரையாளா் தெருவைச் சோ்ந்த சிவகுருநாதன் மகன் சிவபிரசாத் (22). கட்டடத் தொழிலாளியான இவா், சமூக வலைதளத்தில் பொதுமக்களை அச்சுறுத்தம் வகையில் அரிவாளுடன் விடியோ பதிவேற்றம் செய்தாா்.

இதையடுத்து, சேத்தூா் காவல் நிலைய போலீஸாா் கண்டறிந்து, சிவபிரசாத்தை வியாழக்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.