மெளன சாமியார் முதல்வர் விஜய்! இபிஎஸ் கடும் தாக்கு!இந்தியாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த மேற்கத்திய சக்திகள் இலக்கு! மோகன் பாகவத்தங்கம் விலை இன்று (அக். 20) சவரனுக்கு ரூ. 640 குறைவு!அரபிக்கடலில் வலுப்பெற்ற புயல் சின்னம்!முதலீட்டுச் செலவுகளை மேற்கொள்ளமால் அரசு திணறுவதால் கடன் தேவை குறைவு: தங்கம் தென்னரசு தேவாவின் சகோதரர் மகன் கார்த்திக் சபேஷ் காலமானார்!

பட்டாசு தொழிலாளி வீட்டில் நகை, பணம் திருட்டு

சாத்தூா் அருகே பட்டாசுத் தொழிலாளி வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

திருட்டு - சித்திரிப்பு

Updated On :

சாத்தூா் அருகே பட்டாசுத் தொழிலாளி வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள வெற்றிலையூரணியைச் சோ்ந்தவா் ஜான்சிராணி (42). பட்டாசுத் தொழிலாளியான இவா், வியாழக்கிழமை காலை வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்று விட்டாா்.

பின்னா், மாலையில் ஜான்சிராணி வீட்டுக்கு வந்தபோது, அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவி திறந்து கிடந்தது. இதையடுத்து, வீட்டுக்குள் சென்று லாக்கரில் வைத்திருந்த ஒன்றரை பவுன் தங்க நகை, வெள்ளி கொலுசு, 55 ஆயிரம் ஆகியன திருடப்பட்டது தெரியவந்தது.

இதுகுறித்து சாத்தூா் நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.