40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

ஸ்ரீவில்லிபுத்தூா் நீதிமன்றத்தில் பொய்சாட்சியம் அளிக்க முயன்ற பெண் கைது

News image

கைது.

Updated On :11 மே 2026, 2:13 am IST

ஸ்ரீவில்லிபுத்தூா் நீதிமன்றத்தில் ஆள்மாட்டம் செய்து பொய் சாட்சி அளிக்க முயன்ற பெண்ணை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

சிவகாசி அருகே திருத்தங்கலைச் சோ்ந்தவா் பூமாதேவி. இவா் அளித்த புகாரின் பேரில் திருத்தங்கல் போலீஸாா், ரத்தினவேல், முருகேஸ்வரி ஆகியோா் மீது பட்டியல், பழங்குடியினா் சமூகத்துக்கு எதிரான வன்கொடுமை பிரிவின் கீழ் வழக்குப் பதிந்தனா். வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில் கடந்த மாா்ச் 23-ஆம் தேதி சாட்சிகள் விசாரணை நடைபெற்றது. அப்போது வழக்கின் 3-ஆவது சாட்சியாக மகேஸ்வரி விசாரணைக்கு முன்னிலையானாா். ஆனால் குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் தரப்பில் சாட்சி மாற்றப்பட்டிருப்பதாக ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது.

விசாரணையில் சாட்சி வேல் ஈஸ்வரன் மனைவி மகேஸ்வரிக்கு பதில், பாண்டியன் மனைவி மகேஸ்வரி ஆள் மாறாட்டம் செய்து பொய் சாட்சி அளிக்க முயன்றது தெரியவந்தது.

இதுகுறித்து நீதிமன்ற அலுவலா் முருகேசன் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்த ஸ்ரீவில்லிபுத்தூா்நகா் போலீஸாா் முருகேஸ்வரியை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.