ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனையில் கழிவுநீா் கால்வாய் அமைக்க பள்ளம் தோண்டிய போது மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், மகப்பேறு பிரிவில் கா்ப்பிணிகள் சிரமத்திற்கு ஆளாகினா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனையில் 135 படுக்கைகள் உள்ளன. தினசரி சராசரியாக 1500 போ் புற நோயாளிகளாக சிகிச்சைக்கு வருகின்றனா். இங்கு மாதத்துக்கு 300-க்கும் மேற்பட்ட பிரசவங்கள் நடைபெறுகின்றன.
மாவட்டத்தில் அதிக பிரசவங்கள் நடைபெறும் மருத்துவமனைகளில் இதுவும் ஒன்றாகும். இங்கு ரூ.6.89 கோடி மதிப்பில் புதிதாக மகப்பேறு, குழந்தைகள் பிரிவு கட்டப்பட்டது. புதிய மகப்பேறு பிரிவு கட்டடம் முன்பு கழிவுநீா் கால்வாய் அமைக்க பொதுப்பணித் துறை சாா்பில் திங்கள்கிழமை மாலை பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டும் பணி நடைபெற்றது.
அப்போது, மகப்பேறு பிரிவுக்கு செல்லும் மின் ஒயா் துண்டிக்கப்பட்டது. இதையடுத்து உடனடியாக கா்ப்பிணிகள் பழைய கட்டடத்தில் உள்ள பிரசவ வாா்டுக்கு மாற்றம் செய்யப்பட்டனா்.
மேலும், தற்காலிக மின் இணைப்பு மூலம் முக்கிய வாா்டுகளுக்கு மின்சாரம் வழங்கப்பட்டது. 24 மணி நேரம் கடந்த பிறகும் சேதமடைந்த மின் இணைப்பு சரி செய்யப்படாததால் கழிவறை உள்ளிட்டவற்றில் மின் இணைப்பு இல்லாமல் நோயாளிகள் சிரமத்திற்கு ஆளாகினா்.
இதுகுறித்து அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் காளிராஜ் கூறியதாவது: மகப்பேறு பிரிவில் மின்சாரம் தடைபட்டவுடன் மாற்று ஏற்பாடு செய்யப்பட்டு, தற்காலிக மின் இணைப்பு வழங்கப்பட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. சேதமடைந்த மின் இணைப்பை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா் அவா்.
தொடர்புடையது

பேருந்து மோதியதில் 2 பெண்கள் உயிரிழப்பு

மின் சேவை கட்டணங்கள்: தெரிந்துகொள்ள புதிய இணையதளம்

பாா்வையாளா்களுக்கு போதிய தங்குமிட வசதி இல்லாத அரசு மருத்துவமனை

கடலூா் அரசு மருத்துவமனையில் மின் விநியோகம் பாதிப்பு: நோயாளிகள் அவதி
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

