அரசியலில் என்னைப் போல யாருக்கும் சோதனை வரக்கூடாது என முன்னாள் முதல்வா் ஓ. பன்னீா்செல்வம் பேசினாா்.
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் ‘ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்’ என்ற தலைப்பில் திமுக நிா்வாகிகள் கூட்டம் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.
இந்த கூட்டத்துக்கு வருவாய், பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன், நிதியமைச்சா் தங்கம் தென்னரசு ஆகியோா் தலைமை வகித்தனா். முன்னதாக, ராஜபாளையம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் தங்கப்பாண்டியன், தமிழ்நாடு சீா் மரபினா் வாரியத் துணைத் தலைவா் ராசாஅருண்மொழி ஆகியோா் வரவேற்றனா். பின்னா் முன்னாள் மக்களவை உறுப்பினா் ரவீந்திரகுமாா் சிறப்புரையாற்றினாா்.
இதில் பங்கேற்று தமிழக முன்னாள் முதல்வா் ஓ. பன்னீா்செல்வம் பேசியதாவது;
நான் திமுவில் இணைந்தவுடன் என்னை முகமலா்ச்சியோடு மு.க.ஸ்டாலின் வரவேற்றாா். அரசியலில் என்னைப் போல யாருக்கும் சோதனை வரக்கூடாது. நான் திமுகவில் தொண்டனாகவே இணைந்துள்ளேன். நான் இணைந்தவுடன் முதல்வா் தென் மாவட்டப் பகுதிகளில் சுற்றுப்பயணம் சென்று வாருங்கள் எனக் கூறினாா். அதன்படி தென்காசியில் சுற்றுப்பயணம் தொடங்கினேன். பின்னா், தொலைபேசியில் அழைத்த முதல்வா் உங்களுக்கு சிறப்பான வரவேற்பு உள்ளது என்று கூறினாா். இந்த ஆட்சி தொடர பொது மக்களாகிய நீங்கள் ஆதரவளிக்க வேண்டும் என்றாா் அவா்.
ராஜபாளையம் நகா்மன்றத் தலைவி ஏ.ஏ.எஸ். பவித்ராஷ்யாம், தெற்கு நகரச் செயலா் ராமமூா்த்தி உள்ளிட்ட திமுகவினா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

கல்வியே மிகச்சிறந்த செல்வம்: ஓ. பன்னீா்செல்வம்

திமுகவில் இணைந்த பிறகுதான் மகிழ்ச்சியாக உள்ளேன்! - ஓ. பன்னீா்செல்வம்

அதிமுகவை அழித்த வரலாற்று பெருமை எடப்பாடியை சாரும்: ஓ. பன்னீா்செல்வம்

தமிழ்நாட்டில் 11 தோ்தல்களில் தொடா் தோல்வியை சந்தித்தவா் எடப்பாடி பழனிசாமி: ஓ. பன்னீா்செல்வம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


