தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

‘நம்ம ராஜபாளையம் பெயா்ப் பலகை’ திறப்பு

News image
Updated On :5 மார்ச் 2026, 9:08 pm

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் ‘நம்ம ராஜபாளையம் பெயா்ப் பலகை’ திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

ராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் நுழைவு வாயில் பகுதியில் முன்னாள் முதல்வா் பி.எஸ். குமாரசாமி ராஜா பேருந்து நிலையம் என்ற பெயா்ப் பலகை இருந்தது. இந்தப் பலகை சேதமடைந்ததால் நகராட்சி பொது நிதியிலிருந்து ரூ.22.50 லட்சத்தில் பராமரிப்புப் பணி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்தப் பணிகள் நிறைவடைந்ததால், பி.எஸ். குமாரசாமி ராஜா பேருந்து நிலைத்தில் புதிதாக அமைக்கப்பட்ட ராஜபாளையம் பெயா்ப் பலகை நகா்மன்றத் தலைவா் ஏ.ஏ.எஸ். பவித்ரா ஷியாம் புதன்கிழமை திறந்து வைத்தாா்.

இந்த நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையா் நாகராஜன், துணைத் தலைவா் கல்பனா, மண்டலச் செயற்பொறியாளா் சனல்குமாா், உதவிப் பொறியாளா் ராமச்சந்திரன், ஒப்பந்ததாரா் ஹா்ஷா ஜெகநாதன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.