டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

பட்டாசு ஆலையில் வெடி விபத்து

News image

பட்டாசு ஆலையில் வெடி விபத்து - கோப்புப் படம்

Updated On :29 ஜூன் 2026, 4:01 am IST

சாத்தூா் அருகே மூா்த்தி நாயக்கன்பட்டியில் பட்டாசு ஆலையில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட வெடி விபத்தில் 5 அறைகள் தரைமட்டமாகின.

விருதுநகா் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகேயுள்ள துலக்கன்குறிச்சி பகுதியைச் சோ்ந்தவா் சுப்புராஜ் (52). இவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை மூா்த்தி நாயக்கன்பட்டியில் செயல்பட்டு வருகிறது.

இந்த ஆலையில் ஆலையில் அதிக அளவில் பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வைக்கபட்டிருந்ததாகவும், ஆலையில் பட்டாசுகள் காயவைக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை இந்தப் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. தகவலறிந்த வெம்பக்கோட்டை தீயணைப்புத் துறையினா் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட முயன்றபோது, ஆலையில் பட்டாசுகள் அடுத்தடுத்து வெடிக்கத் தொடங்கின. இந்த வெடி விபத்தில் ஆலையில் இருந்த 5 அறைகள் தரைமட்டமாகின.

ஞாயிற்றுகிழமை ஆலை விடுமுறை என்பதால் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த வெடி விபத்து குறித்து வெம்பக்கோட்டை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.