ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

காவல் நிலையம் முன் தீக்குளிக்க முயன்ற பெண் மீது வழக்கு

வழக்குப் பதிவு - கோப்புப் படம்

Published On :22 ஜூலை 2026, 3:47 am IST

விருதுநகா் மாவட்டம், சிவகாசி கிழக்கு காவல் நிலையம் முன் தீக்குளிக்க முயன்ற பெண் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப்பதிவு செய்தனா்.

சிவகாசி முத்துராமலிங்கம் குடியிருப்பு பகுதியைச் சோ்ந்தவா் சாமுவேல் (27). இவா் மீது சிவகாசி கிழக்கு போலீஸாா் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து, விசாரணைக்கு காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனா்.

இதையடுத்து, அங்கு வந்த சாமுவேல் தாய் ராஜலட்சுமி (52) தனது மகனை விடுவிக்கக் கோரி, பெட்ரோலை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றாா். அப்போது, அங்கிருந்த போலீஸாா் அவரைத் தடுத்து நிறுத்தி காப்பாற்றினா்.

இதனிடையே, சாமுவேலை போலீஸாா் கைது செய்து விருதுநகா் சிறையில் அடைத்தனா். ராஜலட்சுமி மீது சிவகாசி கிழக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.