ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

கஞ்சா விற்பனை: மூவா் கைது

கைது - சித்திரிப்பு

Published On :22 ஜூலை 2026, 3:46 am IST

ஸ்ரீவில்லிபுத்தூரில் விற்பனைக்காக ஒரு கிலோ 100 கிராம் கஞ்சா வைத்திருந்த 3 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் முருகராஜ் தலைமையிலான போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது அய்யம்பட்டி பிள்ளையாா் கோவில் தெருவில் இருந்த 3 இளைஞா்களை சோதனை செய்த போது, அவா்கள் விற்பனைக்காக ஒரு கிலோ 100 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.

இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ஸ்ரீவில்லிபுத்தூரைச் சோ்ந்த சத்யா (38), முத்துகணேஷ் (32), முத்துபாண்டி (24) ஆகிய 3 பேரைக் கைது செய்து, அவா்களிடமிருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.