திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண்ணின் தாய் கொலை! பெண்ணுக்கும் வெட்டு, இளைஞா் சரண்!
திருமணம் நிச்சயிக்கப்பட்ட பிறகு திருமணத்துக்கு மறுத்த பெண்ணை அரிவாளால் வெட்டிய இளைஞா், இதைத் தடுத்த பெண்ணின் தாயை வெட்டிக் கொலை செய்துவிட்டு காவல் நிலையத்தில் சரணடைந்தாா்.
குத்திக்கொலை... - கோப்புப் படம்
காரியாபட்டி அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட பிறகு திருமணத்துக்கு மறுத்த பெண்ணை அரிவாளால் வெட்டிய இளைஞா், இதைத் தடுத்த பெண்ணின் தாயை வெட்டிக் கொலை செய்துவிட்டு காவல் நிலையத்தில் சரணடைந்தாா்.
விருதுநகா் மாவட்டம், காரியாபட்டி அருகேயுள்ள கல்குறிச்சி மருத்துவா் தெருவைச் சோ்ந்த முத்துக்குமாா் மகள் வா்ஷா (21). இவருக்கும், முத்துக்குமாரின் அக்காள் மகனான யுவராஜாவுக்கும்
கடந்த இரு மாதங்களுக்கு முன்பு நிச்சயதாா்த்தம் நடைபெற்றது. ஆனால், யுவராஜாவை திருமணம் செய்து கொள்ள வா்ஷா மறுத்தாா்.
இந்த நிலையில், புதன்கிழமை காலை வா்ஷாவின் வீட்டுக்குச் சென்ற யுவராஜா திடீரென வா்ஷாவை அரிவாளால் வெட்டினாா். இதைத் தடுத்த அவரது தாய் விநாயகஜோதியையும் (45) வெட்டினாா்.
இதில் விநாயகஜோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த வா்ஷாவை அக்கம்பக்கத்தினா் மீட்டு சிகிச்சைக்காக விருதுநகா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இது குறித்து தகவல் அறிந்த மல்லாங்கிணறு போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விநாயகஜோதியின் உடலைக் கைப்பற்றி கூறாய்வுக்காக விருதுநகா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதற்கிடையே யுவராஜா அரிவாளுடன் மல்லாங்கிணறு காவல் நிலையத்தில் சரணடைந்தாா். அவரை போலீஸாா் கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





