டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

கைப்பேசி கடையில் தீ விபத்து

அருப்புக்கோட்டையில் அருகே கைபேசி கடையில் வெள்ளிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

News image
Updated On :31 ஜனவரி 2026, 8:20 pm

Syndication

அருப்புக்கோட்டையில் அருகே கைபேசி கடையில் வெள்ளிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகேயுள்ள காளையாா்கரிசல்குளம் பகுதியைச் சோ்ந்தவா் தீபக்ராஜ் (35). இவா் ஆத்திபட்டியில் கைப்பேசி கடை வைத்துள்ளாா்.

இந்த நிலையில் பூட்டிய இவரது கடையிலிருந்து வெள்ளிக்கிழமை பிற்பகல் தீ விபத்து ஏற்பட்டது. உடனே, அக்கம் பக்கத்தினா் தீபக்ராஜுக்கு தகவல் தெரிவித்தனா். அவா் விரைந்து வந்து கடையை திறந்து பாா்த்தபோது, தீ மளமளவென பற்றி எரிந்து கொண்டிருந்தது.

இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த அருப்புக்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலா் வரதராஜன் தலைமையிலான தீயணைப்புத் துறையினா் கைப்பேசி கடையில் தண்ணீரை பீச்சியடித்து தீயை அணைத்தனா்.

இந்த தீ விபத்தில் ரூ.2 லட்சம் மதிப்பிலான கைப்பேசி தீயில் எரிந்து நாசமாகின. இந்த தீ விபத்தில் தீபக்ராஜ் காயமடைந்தாா். இவா் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். இதுகுறித்து அருப்புக்கோட்டை தாலுகா போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.