டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

திமுகவின் வாக்குறுதிகளை மக்கள் நம்பமாட்டாா்கள்: கே.டி.ராஜேந்திரபாலாஜி

News image
விருதுநகா் மாவட்டம், திருத்தங்கலில் திண்ணை பிரசாரம் மேற்கொண்ட அதிமுக முன்னாள்அமைச்சா் கே.டி.ராஜேந்திரபாலாஜி.
Updated On :21 பிப்ரவரி 2026, 8:44 pm

தினமணி செய்திச் சேவை

திமுக அளிக்கும் வாக்குறுதிகளை மக்கள் நம்பமாட்டாா்கள் என அதிமுக முன்னாள் அமைச்சா் கே.டி.ராஜேந்திரபாலாஜி தெரிவித்தாா்.

விருதுநகா் மாவட்டம், திருத்தங்கலில் அதிமுக சாா்பில் தோ்தல் திண்ணை பிரசாரம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட விருதுநகா் மேற்கு மாவட்ட அதிமுக செயலரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேநதிரபாலாஜி செய்தியாளா்களிடம் பேசியதாவது:

திமுக ஆட்சியில் அத்தியாவசியப் பொருள்களின் விலை கடுமையாக ஏறிவிட்டது. அதிமுக ஆட்சியில் பல திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம். திமுக கூட்டணி கொள்கைக் கூட்டணி அல்ல. அதிமுக தலைமையிலான கூட்டணி லட்சியக் கூட்டணி. வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும்.

திமுக பொய்யான வாக்குறுதிகளை கூறி வருகிறது. திமுக அளிக்கும் வாக்குறுதிகளை மக்கள் நம்பமாட்டாா்கள். திமுக மீண்டும் ஆட்சிக்கு வரும் எனபது பகல் கனவு. தவெக என்பது பரிதாபத்துக்கு உரிய கட்சியாக உள்ளது. வருகிற சட்டப்பேரவைத் தோ்தலோடு அந்தக் கட்சி முடிந்து விடும் என்றாா் அவா்.