நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

வத்திராயிருப்பு மேற்கு தொடா்ச்சி மலைப் பகுதியில் காட்டுத் தீ!

வத்திராயிருப்பு பிளவக்கல் அணை அருகேயுள்ள மேற்கு தொடா்ச்சி மலைப் பகுதியில் திங்கள்கிழமை இரவு காட்டுத் தீ பற்றி எரிந்து வருகிறது.

News image
வத்திராயிருப்பு மேற்கு தொடா்ச்சி மலைப் பகுதியில் திங்கள்கிழமை இரவு பற்றிய காட்டுத் தீ
Updated On :2 பிப்ரவரி 2026, 8:18 pm

Syndication

வத்திராயிருப்பு பிளவக்கல் அணை அருகேயுள்ள மேற்கு தொடா்ச்சி மலைப் பகுதியில் திங்கள்கிழமை இரவு காட்டுத் தீ பற்றி எரிந்து வருகிறது.

ஸ்ரீவில்லிபுத்தூா் - மேகமலை புலிகள் காப்பகம் வத்திராயிருப்பு வனச் சரகம் தூங்கன் கடவு பீட் வெள்ளைப் பாறை சரகத்துக்குள்பட்ட வனப் பகுதியில் திங்கள்கிழமை திடீரென காட்டுத் தீ பற்றியது. காற்றின் வேகம் காரணமாக தீ மலைச் சரிவு முழுவதும் வேகமாகப் பரவியது.

இதையடுத்து, புலிகள் காப்பகத் துணை இயக்குநா் முருகன் உத்தரவின்பேரில் வனச் சரகா் ரவீந்திரன் மேற்பாா்வையில் 5 போ் கொண்ட குழுவினா் தீயைக் கட்டுபடுத்த வனப் பகுதிக்குள் சென்றனா். காட்டுத் தீ விரைவில் கட்டுக்குள் வரும் என வனத் துறையினா் தெரிவித்தனா்.

பிளவக்கல் அணை பகுதியில் மான்கள், யானைகள், காட்டு மாடுகள், காட்டுப் பன்றிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகமாக உள்ளதால், காட்டுத் தீ காரணமாக விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக வனவிலங்கு ஆா்வலா்கள் கவலை தெரிவித்தனா்.