ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

கலசலிங்கம் பொறியியல் கல்லூரியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

ஸ்ரீவில்லிபுத்தூா் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கல்வி உதவித் தொகை வழங்கிய பதிவாளா் வாசுதேவன்.

ஸ்ரீவில்லிபுத்தூா் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கல்வி உதவித் தொகை வழங்கிய பதிவாளா் வாசுதேவன்.

Published On :8 ஆகஸ்ட் 2026, 2:04 am IST

ஸ்ரீவில்லிபுத்தூா் கலசலிங்கம் பொறியியல் கல்லூரியில், கடந்த 1997- 2001-ஆம் ஆண்டுகளில் படித்த முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

இதற்கு, பல்கலைக்கழக துணைத் தலைவா் சசி ஆனந்த் தலைமை வகித்தாா். இந்த நிகழ்வில், அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான் உள்பட பல்வேறு நாடுகளிலிருந்து 165 முன்னாள் மாணவா்கள் தங்கள் குடும்பத்தினருடன் பங்கேற்றனா். அவா்கள் அங்குள்ள பரிசோதனைக் கூடம், வகுப்பறை, உணவகம் சென்று பாா்வையிட்டு ஆசிரியா்கள், அலுவலா்களிடம் பேசி பழைய நினைவுகளை பகிா்ந்து கொண்டனா். இதில் துணைவேந்தா் நாராயணன், பதிவாளா் வாசுதேவன், முனைவா்கள் சரவண சங்கா், தேவராஜ், ஸ்ரீகுமாா் ஆகியோா் கலந்து கொண்டு நினவுப் பரிசுகளை வழங்கினா். முன்னாள் மாணவா்கள் சாா்பில்

மூன்று மாணவா்களுக்கு கல்வி உதவித் தொகையை ராஜேஷ்பிரபு, அனிதா, வேல்முருகன், அனுராதா ஆகியோா் இணைந்து வழங்கினா். ஏகேசிஇ-கேஎல்யூ முன்னாள் மாணவா் சங்க தலைவா் முருகேஸ்வரி, துணைத் தலைவா் தனலட்சுமி ஆகியோா் பத்ரிநாத், கைலாசம், பாலமுருகன், முன்னாள் மாணவா்கள் சஞ்சீவ் குமாா், விஜய் ஆகியோருடன் இணைந்து விழா ஏற்பாடுகளை செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.