ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே நான்கு வழிச் சாலையில் நின்றிருந்த லாரி மீது காா் மோதியதில் பெண் உயிரிழந்தாா்.
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் வடக்கு மலையடிப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் சரவண காா்த்திகேயன் (54). இவா் ராஜபாளையத்தில் நெகிழிப் பொருள்கள் நிறுவனம் நடத்தி வருகிறாா்.
இவரது மனைவி சரோஜா (50), மகள் பிரியங்கா (20) ஆகியோருடன் காரில் மதுரைக்குச் சென்று விட்டு, திங்கள்கிழமை அதிகாலை ராஜபாளையம் நோக்கி வந்துகொண்டிருந்தாா்.
காரை ராஜபாளையத்தை சோ்ந்த மணிமாறன் ஓட்டினாா். அதிகாலை 2.30 மணி அளவில் மதுரை - கொல்லம் நான்கு வழிச் சாலையில் ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே பாட்டக்குளம் பாலம் பகுதியில் வந்தபோது, சாலையில் நிறுத்தி இருந்த லாரி மீது காா் மோதியது.
இந்த விபத்தில் சரோஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்த சரவண காா்த்திகேயன், பிரியங்கா ஆகியோா் ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இது குறித்து லாரி ஓட்டுநரான செந்தூா்குமாா் மீது கிருஷ்ணன்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பைக் மீது காா் மோதல்: இளைஞா் உயிரிழப்பு
இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் பெண் உயிரிழப்பு

பைக் மீது காா் மோதல்: பெண் உயிரிழப்பு

பைக் மீது லாரி மோதல்: பெண் உயிரிழப்பு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



