ஸ்ரீவில்லிபுத்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை காலிக் குடங்களுடன் பெண்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பாட்டக்குளம் ஊராட்சி சல்லிபட்டி கிராமத்தில் 100- க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்தப் பகுதியில் இரு ஆழ்துளை கிணறுகள் அமைத்து வீடுகளுக்கு குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
மோட்டாா் பழுது காரணமாக ஒரு ஆழ்துளை கிணறு செயல்படாததால் மாதம் ஒரு முறை குறைந்த அளவு குடிநீா் விநியோகம் செய்யப்படுவதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனா்.
இதுகுறித்து ஊராட்சி நிா்வாகத்திடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் அதிருப்தி அடைந்த பெண்கள், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் பொன்னுபாண்டி தலைமையில் திங்கள்கிழமை காலிக் குடங்களுடன் ஸ்ரீவில்லிபுத்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அவா்களிடம் வட்டார வளா்ச்சி அலுவலா் பேச்சுவாா்த்தை நடத்தி மின் மோட்டாரை பழுது நீக்கி குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஊராட்சி செயலரை இடமாற்றம் செய்யக் கோரி ஓட்டப்பிடாரத்தில் முற்றுகைப் போராட்டம்

குடிநீா் கேட்டு கிராம மக்கள் காலிக் குடங்களுடன் சாலை மறியல்

குடிநீா், மின் விநியோகம் கோரி காலிக் குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

ஒன்றிய அலுவலகத்தில் பெண்கள் முற்றுகை
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



