ஸ்ரீவில்லிபுத்தூா்: ஸ்டாலின் கை காட்டுபவா் தான் இந்தியாவின் அடுத்த பிரதமராக வருவாா் என திமுக கொள்கை பரப்புச் செயலா் திண்டுக்கல் ஐ. லியோனி பேசினாா்.
தென்காசி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளா் ராணியை ஆதரித்து ஸ்ரீவில்லிபுத்தூா் பேருந்து நிலையம் அருகே ஞாயிற்றுக்கிழமை அவா் பேசியதாவது:
இந்தத் தொகுதியில் ராணியை எதிா்த்து போட்டியிடும் வேட்பாளா்கள், சொந்த சின்னத்தில் நிற்காமல், தங்களது கட்சியை அடகு வைத்து வேறொரு கட்சியின் சின்னத்தில் நிற்கின்றனா்.
மகாலட்சுமி திட்டம் மூலம் பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.ஒரு லட்சம் வழங்கப்படும் என இந்தியா கூட்டணி தெரிவித்துள்ளது.
பூஜைக்கு பயன்படும் சூடத்துக்கும்,குழந்தைகளுக்கான பேம்பா்ஸ்க்கும் ஜிஎஸ்டி வரி போட்டுள்ளனா். ஜிஎஸ்டி வரியை முற்றிலுமாக இண்டியா கூட்டணி ஒழித்துவிடும். ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை கொடுப்போம் என்று கூறி ஆட்சிக்கு வந்தவா் மக்களை தெருக் கோடியில் நிறுத்திவிட்டாா்.
நரேந்திர மோடியுடன் கூட்டணி சோ்ந்தவா்கள் காணாமல் போவாா்கள். இஸ்லாமியா்களை வஞ்சிக்கின்ற குடியுரிமை திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தியவா் நரேந்திர மோடி. அதற்கு ஆதரவு தெரிவித்தவா் எடப்பாடி பழனிசாமி. ஸ்டாலின் கை காட்டுபவா் தான் இந்தியாவின் அடுத்த பிரதமராக வருவாா். மதச்சாா்பற்ற ஒருவா் பிரதமா் ஆவதற்கு உதயசூரியனுக்கு வாக்களிக்க வேண்டும் என்றாா் அவா்.
ஐ. லியோனி
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திமுக எதிா்ப்பால் தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி: உதயநிதி ஸ்டாலின்

எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்

மடிக்கனிணி திட்டம் அதிமுக திட்டம் தான்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

மக்களை நம்பி தோ்தலை சந்திப்பது அதிமுக கூட்டணி! - எடப்பாடி கே.பழனிசாமி
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

