சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

கருவில் தொலைந்த குழந்தை: கவிஞர் ராம்க்ருஷ்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:25 pm

கவிதைமணி

தேர்வெழுத உட்கார்ந்த ஒரு நாளின் காலைப்பொழுதுஆர்வமுடன் கேள்வித் தாள் பார்த்து ஆசையாகியேகோர்வையாய் பதில் எழுதத் தொடங்கிய வேளையிலேவேர்வையுடன் போராட்டக் காரர்கள் உள்ளே வந்திடவிடைத்தாள்கள் விடைபெற்றன என்னை விட்டேஅடைகாத்த பதில்களெல்லாம் கண்ணில் நடனமாடதொடை நடுங்க எழுந்து வெளியேற வேண்டிய நிலைதடையாகி தேர்வு கருவில் தொலைந்த குழந்தையானதுபோட்டிக்குக் கவிதை எழுதி போர்க்கோலம் கொண்டிடஏட்டிக்குப் போட்டியாக அஞ்சலக விடுமுறை நீண்டிடஈட்டியாக காலம் கடந்தது நெஞ்சில் பாய்ந்து நின்றதுவாட்டிடும் மனம் கருவில் தொலைந்த குழந்தையானதுகண்களால் கவிதை படித்து வளர்ந்த நிலவுக் காதல்எண்களால் எழுத்தால் விவரிக்க இயலாவண்ணம்தண்ணென்று தழைத்து வளர்ந்தது மனப் புரிதலோடுபெண்ணென்ற பேதமை வருந்த சாதி மதம் தடையாகிபாதியில் நின்றது காதலும் கருகிப் போய் நொந்ததுஆதி மனிதர்கள் போலே இருந்திருந்தால் இந்த நிலைநாதியற்றுப் போயிருக்காது நடுக்கமும் ஆகியிருக்காதுவாதியற்ற வாழ்வு கருவில் தொலைந்த குழந்தையானதுமூத்த மருத்துவர் பாத்திரமேற்கச் சென்ற வயதானவர்பூத்த மலராக தலையெங்கும் முடியாக இருந்ததாலேகாத்தவராயராக வழுக்கைத் தலையர் வர பாத்திரமும்நீர்த்துப்போய் கருவில் தொலைந்த குழந்தையானதே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.