சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

கருவில் தொலைந்த குழந்தை: கவிஞர் இரா. இரவி

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:25 pm

கவிதைமணி

கருவில் இருப்பது பெண் என்று தெரிந்தால்கதையை முடிக்கும் அவலம் நடந்தது!கருவில் இருப்பது ஆணா? பெண்ணா என்பதைகருவுற்றோருக்கு அறிவிப்பது குற்றம் என்றானது!கருக்கலைப்பு கொஞ்சம் குறைந்து விட்டதுகருவிலேயே சிதைப்பது மடமை குற்றம்!பெரிய உயிரான அன்னைக்கும் ஆபத்துபெரிய உயிரும் பறிபோன நிகழ்வுகள் உண்டு!பெண்ணிற்கு சமஉரிமை தருவது இருக்கட்டும்பெண்ணிற்கு பிறக்க உரிமை தாருங்கள்!உருவான உயிரை உருக்குலைப்பது முறையோ?உணராமல் சிலர் குற்றம் புரிந்து வருகின்றனர்!ஆண்குழந்தை பெற்ற பலரும் அவதிப்பட்டு வருகின்றனர்பெண்குழந்தை பெற்ற எல்லோரும் சிறப்படைந்துள்ளனர்!ஆண்குழந்தையை ஒழுக்கமாக வளர்ப்பது கடினமானதுபெண்குழந்தையை ஒழுக்கமாக வளர்ப்பது எளிதானது!கல்வியிலும் பெண்குழந்தைகளே சிறந்து விளங்குகின்றனர்கடைசிவரை பாசம் பொழிவதும் பெண்குழந்தைகளே!திருமணமானதும் திரும்பிப் பார்ப்பதில்லை ஆண்திருமணமானாலும் என்றும் மறக்காதவள் பெண்!ஆணை வரவென்றும் பெண்ணை செலவென்றும்அறிவிலித்தனமாக பேசுவதை நிறுத்திடுங்கள்!உலக அரங்கில் சாதித்து வருகிறாள் பெண்உயர்வுகள் பல அடைந்து சிறக்கிறாள் பெண்!மதுவிற்கு அடிமையாகிறான் வளர்க்கும் ஆண்மகன்மதுவிற்கு அடிமையாவதில்லை வளர்க்கும் பெண்மகள்!பெற்றோர் பேச்சைக் கேட்டு நடப்பவள் பெண்மகள்பெற்றோர் பேச்சைக் கேட்டு நடப்பதில்லை ஆண்மகன்!கருவில் தொலைந்த குழந்தைகள் பல உண்டுகருவில் உருவான சிசுவை தொலைக்காமல் இருப்போம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.