சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

கருவில் தொலைந்த குழந்தை:  பாவலர் கருமலைத்தமிழாழன்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:25 pm

கவிதைமணி

முன்னோர்கள்  மனக்கருவில்  வளர்த்துத்  தந்த    முதன்மையான  பண்பொழுக்கக்  குழந்தை  தன்னைப்பன்னாட்டு  மோகத்தால்  பாதை  மாறிப்    பகட்டினிலே  உருமாற்றித்  தொலைத்து  விட்டோம்தன்னலத்தால்  யாதும்ஊர்  கேளிர்  என்னும்    தகுநட்பு  மனிதத்தை  விட்டு  விட்டோம்தன்மகனைத்  தன்னுயிரை  நீதிக்  காகத்    தந்திட்ட  நேர்மையினைக்  கொன்று  விட்டோம் !சங்கத்துத்  தமிழரெல்லாம்   சாதிக்  யற்ற    சமத்துவத்தில்   வாழ்ந்ததினைச்  சிறுமை  செய்துசங்கங்கள்  சாதிக்காய்  ஏற்ப  டுத்திச்    சண்டையினை  வீதிகளில்  போடு  கின்றோம்மங்கலமாய்  மூவேந்தர்   வளர்த்த  ளித்த    மாத்தமிழை  மூலையிலே  முடங்க  வைத்தேஎங்கிருந்தோ  வந்தவன்கால்  அடிமை  யாகி    ஏற்றமிகு  மானத்தைப்  புதைத்து  விட்டோம் !கருவினிலே   உள்ளசிசு   பெண்தான்  என்றால்    கருவினையே  கலைக்கின்ற  கயமை  போலஅருமன்றல்   சாதிமாறிப்  புரிந்தோர்  தம்மை    அழிக்கின்றபெற்றோரின்கொடுமைபோலபெருமைமிகு   தமிழ்மொழியைத்   தமிழ  னின்று    பெயர்சொல்லி  அழைப்பதற்கும்  நாணம்  கொண்டுதிருவிழாவில்  குழந்தையினைத்   தொலைத்தல்  போன்று    திருவனைத்தும்  தொலைத்திட்டான்  மொழியி  ழந்தே !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.