கருவில் தொலைந்த குழந்தை: சீர்காழி .ஆர்.சீதாராமன்


பெண்மை எதனினும் உயர்வு
தாய்மை அதனினும் உயர்வு
தாய் என்று உயர்ந்து விட்டால்
தனித்துவம் தானாக வரும்
வாடகைத் தாய் என்று உலகம்
முன்னேறிச் சென்றாலும்
கருவில் தொலைந்த ஒரு
குழந்தை தவிப்பு தான் ...
நாளும் பொழுதுமாக மாதம்
மாதமாக தோன்றிய சிறு
கருப்புள்ளி வளர வளர
குழந்தையாய் வரம் வரமே
கருவில் சுமந்த குழந்தை
தொலைந்த சோகம் என்பது
ஈடு செய்ய முடியாத இழப்பு
தவிப்பு துடிப்பு துயரம் தான்
கருகலைப்பு என்பது அபாய
உயிர் பயணம் தான் பெண்
வாழ்வில் உயிர் தவிப்பு தான்
கருவில் தொலைந்த சிசு ."
இன்னொரு உயிரை கருவில்
தாங்கி தொப்புள் கொடி
பந்தம் கொடுத்து கருவில்
தொலைந்த குழந்தை பேரடி.
கருவில் தொலைந்தது சாதா
பொருள் அல்ல பணம் அல்ல
எதிர்காலத்தில் பேசும் உயிர்
பொக்கிஷம் தேடல் கடல்
தற்காப்பு பாதுகாப்பை கூட்டி
விஞ்ஞான மெய்ஞான
வளர்ச்சியை துணை வைத்து
கருவில் தொலையாமல்
குழந்தையை காப்போம் ...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...