சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

கருவில் தொலைந்த குழந்தை:  அழகூர். அருண். ஞானசேகரன்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:25 pm

கவிதைமணி

கருவினில் தொலைந்திட்டக் குழந்தைகள் கணக்கு              கணக்கினில் அடங்காது,       கல்வி அறிவிலா மூடர்கள் செயலிதைக்              காலமும் பொறுக்காது!பெருமை இலாச்செயல் என்பதை உணராப்              பேதைகள் பலருண்டு,        பெரும்பழி இதனால் கிட்டிடும் என்பதை              பேதைகள் உணரட்டும்!அருமை மிக்கதே இரண்டும் என்கின்ற              அறிவார்ந்தத் திறன்கொள்ளார்,        அழிப்பதோ பெண்ணினை கருவினில் வைத்தே,              ஆரிதைப் பொறுத்திடுவார்?தருமமே இல்லாச் செயலிது நம்மின்               தமிழகந் தனிலுண்டு,         தாங்கொணாக் கொடுமை இதுதன்னை நாமெலாம்               தடுத்திடத் தான்வேண்டும்!அலைமகள் மலைமகள் கலைமகள் தமைநாம்               அனுதினம் துதிக்கின்றோம்,        அகிலத்தைக் காத்திடும் தேவியர் இவரென               அறிந்திட்டுப் போற்றுகிறோம்!நிலையிதை உணராப் பேதைகள் தானே               நீக்குவார் கருவினிலே,       நிலையற்ற வகிதத்தில் ஆண்பெண் என்றிட               நேர்ந்திடும் அவலங்களே!விலைதந்து பெண்களை வாங்கிடும் நிலைமை               விரைவினில் வரக்காண்போம்,        விளக்கம் இல்லா ஆண்களுக் கினிமேல்               விவாகம் இலையாகும்!கலைப்பதும் பெண்களேதானிந்த கொடுமையைக்               கவனத்தில் கொளவேண்டும்,கருத்துடன் அரசும் இதுதன்னை ஒழித்திடும்                கடமையைச் செயவேண்டும்!பெண்குழந்தை வேண்டாமென பெரிதுமாய் மக்களின்றுஎண்ணுவதும் கொடுமையே, இழிவூட்டும்!--இன்னதும்கல்வியறிவு இல்லாதக் கபோதிகள் செயலாகும்;இல்லாதே போகுவதும் என்று?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.