தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

மிச்சத்தை மீட்போம்: பெருமழை விஜய்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:26 pm

கவிதைமணி

மிச்சத்தை மீட்டெடுக்க மிகுதியும் பலர்க்காசைகச்சத் தீவினையும் கயவர்க்குத் தாரை வார்த்தார்பச்சைத்   தமிழனையே   பகடைக்   காயாக்கிசொச்சமே யில்லாமல் சுரண்டிட்டார் நாடுதனை!ஆற்றுமணல் சுரண்டல் அதன்பின் தாதுமணல்கிரானைட் குவாரிகளில் கணக்கின்றி பெருஞ்சுரண்டல்ஊரெங்கும்  கிடந்த  உதிரி  நிலங்களையேஆள்வோர் பெயரால் அப்படியே மிகச்சுரண்டல்!ஆறடி நிலந்தான் அடிநிலத்தில் புதைவோர்க்குஅதுகூடச் சொந்தமில்லை சுடுகாட்டில் எரிவோர்க்கு!இருந்தும் மனிதன் இன்னும் சுரண்டுகிறான் இல்லாதவனைக் காட்டிலும் இருப்பவனே பெருஞ்சுரண்டல்!சுரண்டி வாழ்வதையே சுகமாய்க் கருதுமிவர்மிரண்டே வாழ்ந்து வெந்துயரில் மிகவுழந்துதரந்தாழ்ந்து போகின்றார்!தன்மதிப்பை இழக்கின்றார்!இவர்களிடமிருந்து இந்தியாவை நாம் மீட்டெடுப்போம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.