மிச்சத்தை மீட்போம்: கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி

Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:26 pm

வேலங்குச்சிகள் செய்த வேலை-இப்பொழுது சில களிம்புகள், பற்களின் விளிம்புகளில்செய்து கொண்டிருக்கின்றன—அன்று திண்ணைப்பள்ளிகள்வித்தையின் விந்தைகள்,இன்றோ கல்விக்கடைகள் பலமுதலீடு செய்யும் பங்குச்சந்தைகள் –காற்றிலிருந்துகாணாமல் போனது நீர் சத்து .ஒரு ஈரமில்லா மனிதமனங்களைப்போல்உலர்ந்து வருகிறது --வாழ்க்கை மரங்களில்எங்கே க்ளோரோபில் ?பசுமைக்காதல் இல்லாதவரட்டுத் திருமண உறவுகள் --தாய்ப்பாலாய் ஒரு கார்பன் –அந்த எரிபொருள்தாங்கிப்பிடித்து எரிய வைக்க வேண்டுமேவாழ்க்கை விளக்கை ?“வெளிச்சம்” “சூடு”இரண்டுமின்றி ஒரு சூரியன்--அப்படிதான், தொழிலில் “நாணயமும் நியாயமும்” ..இவற்றை கடத்தியது யார் ??பேராசை அரக்கனோ ?பசு வளர்த்துபயிர் செழித்த பூமி –பூனை வளர்த்தோம்புதைக்குள் விழுந்ததுநாமா ? நம் நிலமா ??நமக்குள் பாரதப் பண்பாடுசீராகத்தான் ஓடிக்கொண்டிருந்தது-இந்த ரயிலை தடம் மாற்றியது யார் ?நிற்கட்டும்தோல் தான் உரிந்துள்ளது-மரபணு மாறவில்லை..இனியாவதுஇந்தியப்பெண்களின்கருப்பைகளில் கலாசாரத்தைகருத்தரிக்க வைப்போம் –புறப்படு – மிச்சத்தை மீட்க புறப்படு
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...