சட்டம்: ரீ. நீலாவதி


வெற்றுக் கவிதை எழுதியது போதும்
காலம் கடந்து நிற்கும்
கவிவுலகம் போற்றும் கவிதை வேண்டும்!
கடல் கடந்து உழைத்தது போதும்
கண்ணியம் கொடுக்கும்
தாய்நாடு திரும்ப வேண்டும்!
சாயம் பூசும் தீர்ப்பு போதும்
சாதி, மத பேதமில்லா
சமத்துவத் தீர்ப்பு வேண்டும்!
நோயினால் வாடியது போதும்
நோயை வெல்லும்
உணவு உண்ணும் பழக்கம் வேண்டும்!
பசியுடன் உழுதது போதும்
ரசித்து புசித்து வயிறார
சாப்பிடும் காலம் வேண்டும்!
மதுவுக்கு மயங்கியது போதும்
மது ஒழிப்புச் சட்டம்
மரணத்திற்கு முன் வர வேண்டும்!
புத்தக மூட்டை சுமந்தது போதும்
சுமைக்குறைக்கும்
சுகமான நவீனக் கல்வி வேண்டும்!
மாற்றிய வரலாற்றை கற்றது போதும்
மறைத்த உண்மையை சொல்லும்
தூய்மையான கல்வி வேண்டும்!
நீரில்லாமல் தவித்தது போதும்
நீதி நிலைபெற கட்டற்ற
நதிநீர் இணைப்பு என்றும் வேண்டும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...