கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

சட்டம்: பாவலர் கருமலைத்தமிழாழன்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:16 pm

கவிதைமணி

சட்டமொரு   இருட்டறையாம்   வழக்கு  ரைஞர்            சாற்றுமொழி  ஒளியேற்றும்  நீதிக்   கென்றுகட்டுரைத்த   அறிஞர்தம்   சொற்க  ளெல்லாம்            கனவாகிப்   போனதின்று   நீதி   மன்றில்திட்டமிட்டுக்   கொலைகளினை   செய்வ  தற்கும்            திருடுதற்கும்   சிக்காமல்   இருப்ப   தற்கும்சட்டத்தைப்   படித்தவரே   வழிகள்   கூறிச்            சட்டத்தை   ஏமாற்றிக்   கொழிக்கின்   றார்கள் !செவியாலே   வாதங்கள்  கேட்டு   நீதி            செப்புதற்கே   கண்களினைக்   கட்டி   வைக்கநவில்வோர்கள்   நீதித்தாய்   குருடென்   றெண்ணி            நடிக்கின்றார்   பொய்தன்னை   உண்மை   யாக்க !குவிந்திருக்கும்   அதிகார   ஆட்சி   யாலே            குனிந்துசட்டம்   பணியுமாறு   வளைக்கின்   றார்கள்குவிந்திருக்கும்   கரும்பணத்தின்   துணிவி   னாலே            குரல்வளையை   வளைத்தூமை   ஆக்கு   கின்றார் !செல்வாக்கு    பணமிருப்போர்   கால்கள்   சுற்றிச்            செல்லநாய்போல்   சட்டந்தான்   வாலை   ஆட்டும்செல்வமில்லா   ஏழையரைக்  குரைத்துப்   பாய்ந்து            செவ்வாயால்   கடித்தவரைத்   துரத்தி  ஓட்டும்நல்லபடி   ஆட்சிநாடு   நடக்க   வேண்டி            நல்லறிஞர்   அம்பேத்கார்   போன்றோர்   தந்தவெல்லமெனம்   சட்டத்தை   ஈக்கள்   மொய்த்து            வெம்நஞ்சாய்   மாற்றிடாமல்   காப்போம்  வாரீர் !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.