சட்டம்: -ரெத்தின.ஆத்மநாதன்

Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:16 pm

இதிகாச காலந்தொட்டே இயல்பு வாழ்க்கை மீறிஉல்லாச வாழ்வு தேடி உயர்குடி மக்களெல்லாம் அதிகாரத் துஷ்பிரயோகம் செய்து அவரவர் விரும்பினாற் போல்தில்லாலங்கடி வேலை காட்டித் திறமையை வீணிற் போக்கிகதிகலங்கி மற்றோரெல்லாம் கண்ணீரில் மிதந்ததாலேஅல்லல்தனைப் போக்கவென்றே ஆங்குதித்தது பொதுச் சட்டம்!சட்டத்தின் முன்னாலென்றும் எல்லோரும் சம மேயென்று எத்தனை வாதிட்டாலும் எப்படிப் போரிட்டாலும்பட்ட கதை வாதையென்று பலபேர்கள் சொல்லும் போது அத்தனை துயர்களுக்கும் அடிவேரைக் கண்டு களைந்துவிட்டத்தின் துணையால் நிற்கும் வீட்டினைப்போல நல்ல சத்தான வாழ்க்கை வாழ நீளும் சமர் இன்னும் ஓயவில்லை!விதிகளே சட்டமாய் வீறு கொண்டெழுந்த நாட்டில்மதியினை நன்கு கொண்டோர் மதிக்காமல்போனதாலேசதிகளே இங்கு நீண்டு போற்றும் சட்டங்களாகிப் போகபதி விரதைகளைக்கூடப் பாரில் பரத்தையர் ஆக்கிப் பார்க்கும்அதி நவீனப் போக்கை களையும் நாள் என்றோ?!அன்றே ந தி நீர் பிரச்னை தீர்ந்த நாளைப்போல் மகிழ்வுண்டாகும்!மகிழ்வான வாழ்வு வாழ சட்டத்தை மதித்தலே முறையென்றாகும் நெகிழ்வான சட்டமே என்றும் வாழ்வு சிறந்திட உதவியாகும்!நடைமுறை வாழ்க்கைக்கேற்ப நாளும் சட்டம் மாறினால்தான் படையிடை வாழ்க்கையிங்கு பக்குவம் பெற்றிலங்கும்!பறவையாய்ச் சிறகடித்து வானில் நாமும் பறந்திட வேண்டுமெனில்உறவை சட்ட முறையுடனே நாம் உணர்ந்து போற்ற வேண்டும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...