கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

நீதியைத் தேடி: பொன் . குமார்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:16 pm

கவிதைமணி

நீதியைத் தேடி
நீதி மன்றம் சென்றாலும் 
நிச்சயம் கிடைப்பதில்லை
நீதி.

நீதி கிடைக்குமென்றே
நம்பிக்கையிலேயே 
வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்
மக்கள்.

நீதி கிடைக்காத தாலேயே
மதுரையை எரித்தாள்
கண்ணகி.
நீதி கிடைக்காமல்
நெஞ்சுக்குள்ளேயே
எரிந்து கொண்டுள்ளார்கள்
இன்றைய கண்ணகிகள்.

ஐந்தறிவு பசு
நீதியைக் கேட்டதற்காக
மகனையே பழியிட்டு
நீதியை நாட்டிய 
நல்ல மன்னர்களும்
வாழ்ந்த நாட்டில்
அநீதியே
அரங்கேறி வருகிறது.

அநீதி வழங்குவதும் தவறு.
அதே போல் 
நீதி வழங்கப் படாமல்
தாமதப் படுத்துவதும் தவறு.

நீதிக்காக 
நீதிமன்றத்தில்
விசாரணைக்கு வராமலே
வழக்குகள் இலட்சக் கணக்கில்
உள்ளன.

நிதியைத் தேடுவதும்
நீதியைத் தேடுவதுமே
நித்தம் வாழ்வாகி விட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.