நீதியைத் தேடி: கவிஞர் மா.உலகநாதன்,


எங்கே தேடுவேன்,நீதியை
எங்கே தேடுவேன்;
வாடி வாசலிலா,கடற்கரை
மணலிலா?
காணாமல் போன ஒன்றைக்
கடுகியே தேடச் செய்கிறீர்!
மனத்துக்கண் மாசு அமர்ந்ததுமே
இனத்துக்கண் நீதி இற்றுப் போகுமே!
மனுச்சோழன் ஆண்ட மண்ணில்,மாய்மாலக்காரர்களால் நீதி மாண்டு போய் நெடுங்காலம் ஆனதே!
நீதிபோதனை, பாடவகுப்பிலிருந்தும்
மனத்தேடல் தொகுப்பிலிருந்தும்
மறைந்து போனதே!
இதில்
எங்கே தேடுவேன்,நீதியை எங்கே தேடுவேன்;
தனியொரு மனிதன் நீதிமான் என்றால்
சமுதாயமும் கவரிமான் ஆகாதோ?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...