அதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரியை உயர்த்தி திட்டங்களை நிறைவேற்றுவோம் : இபிஎஸ் விளக்கம்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!
/

மல்லுக்கட்டும்  ஜல்லிக் கட்டு : கே. நடராஜன்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:16 pm

கவிதைமணி

துள்ளி வரும் காளை ...அதை அடக்கும் 
துடிப்புடன்  களத்தில் இளம் காளையர் !

இது போர்க்களம் இல்லையே...ஒரு 
வீர விளையாட்டுக்களம்  தானே !

ஜல்லிக்கட்டு ...இந்த ஒரு பெயரே 
உசுப்பிவிடுமே  தூங்கும் இளைஞரை !

காளை மாட்டுடன் மல்லுக்கட்டிய  ஒரு 
வீரர் கூட்டம் இன்று ஜல்லிக்கட்டுக்காகவே 

மல்லுக்கட்டும் ஒரு அவலம் !  ஜல்லிக்கட்டு 
நடக்குமா நடக்காதா ..இந்த கேள்விக்குறி 
ஜல்லிக்கட்டுக்கு மாத்திரம் அல்ல ...ஒரு  

கூட்டத்தின் குறி நம் ஜல்லிக்கட்டு மாட்டின் மீதே !
ஆடு நனையுதே என்று ஓநாய் அழுத கதை 
படித்ததில்லையா நாம் ?  அதே கதைதான் 
மீண்டும் அரங்கேற்றம் இன்று  ஜல்லிக்கட்டில் !

ஜல்லிக்கட்டு மாட்டினத்தின் சந்ததிக்கு 
சத்தமில்லாமல் ஒரு முற்றுப்புள்ளி வைக்கத் 
துடிக்கிறது ஒரு கூட்டம் இன்று... அவர் 
ஆடும் ஆட்டம் ஒரு "சோதனை  ஓட்டம் " 
இன்று... கேட்கவே வேதனை நமக்கு !

சோதனை எது  வந்தாலும்  சாதிக்க வேண்டும் 
நாம் ! மல்லுக்கட்டி  மீட்க வேண்டியது வெறும் 
ஜல்லிக்கட்டு போட்டியை  மட்டுமல்ல !

நம்  ஜல்லிக்கட்டு மாட்டினத்தின் வாழ்வையும்  அதன்   
இன வளர்ச்சியையும்  சேர்த்துதான் !

மல்லுக்கட்டுவோம்  ஜல்லிக்கட்டுக்கு ...ஜெயித்துக் 
காட்டுவோம் இந்த  உலகுக்கு நாம் யார் என்று !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.