அதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரியை உயர்த்தி திட்டங்களை நிறைவேற்றுவோம் : இபிஎஸ் விளக்கம்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!
/

மல்லுக் கட்டும் சல்லிக் கட்டு: பாவலர் கோ. மலர்வண்ணன்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:16 pm

கவிதைமணி

தமிழர்தம் வீரவிளை யாட்டில் ஒன்று
    தைத்திங்கள் பொங்கல்நன் நாளை ஒட்டி
தமிழகத்தில் அரங்கேறும் சல்லிக் கட்டாம்!
    தனிப்பெருமை வாய்ந்ததிந்தச் சல்லிக் கட்டை
அமைதியுடன் நிறைவேற்றும் அலங்கா நல்லூர்;
    அதைப்போன்றே மற்றெல்லா இடத்தும் காணும்!
குமைந்திடவே அதையின்று தடைசெய் கின்றார்;
    குற்றேவல் விழைவார்க்குத் துணைநிற் கின்றார்!

'ஏறுதழு வல்'என்னும் சல்லிக் கட்டின்
    இயல்புணரார், அதையாய்ந்து பாரார் தாமே
மாறுகொளத் தமிழர்தம் பண்பாட் டிற்கு
    மாசுரைக்கும் பாங்கினிலே தடைகொ ணர்ந்தார்!
ஊறுசெயும் எண்ணமிலாத் தமிழன் தானா
    உயிரெனவே வளர்த்துவரும் காளை கட்கு
மாறுசெய்யத் துணிந்திடுவான்!? காளை யோடு
    மகிழ்ந்துவிளை யாடல்தான் சல்லிக் கட்டே!

தமிழர்தம் நாகரிகம், உயர்பண் பாட்டில்
    தகைமையில்லா தவைகளுக்கோ இடமே இல்லை!
அமிழ்தமெனும் தமிழைத்தாய் மொழியாய்க் கொண்ட
    அருந்தமிழர் உலகிற்கே காட்டாய் வாழ்வார்!
இமியளவும் பழிப்பில்லா வாழ்க்கை வாழும்
    இனியவரா கேடுசெய்யும் செயல்வ குப்பார்?!
குமிழ்போலும் கொள்கையினை உடையோர் தாமே
    குறைகூறி முன்னோர்க்குப் பழிசேர்க் கின்றார்!

காதலையும் வீரத்தையும் இருகண் ணாகக்
    காத்துவந்தார் நற்றமிழர்! சல்லிக் கட்டைக்
காதலிதன் காதலனின் ஆண்மை, ஊரார்
    கண்டுமெச்சத் தகுங்கருவி யாய்தான் கண்டாள்!
ஆதலினால், இளம்பெண்கள் காளை போலும்
    ஆண்மகனைத் தெரிந்தெடுக்க வளர்த்தார் காளை!
நோதலைச்செய் யாதிந்தச் சல்லிக் கட்டு!
    நுண்ணறிவு கொண்டவர்க்கே புரியும் நன்றே!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.