பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!இலவசங்களுக்கு எதிரான மனு: அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்புகூடுதல் பெட்டிகளுடன் மின்சார ரயில்கள் இயக்க நடவடிக்கை: ரயில்வே அதிகாரிகள் தகவல்!இன்று உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி: சென்னை மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்புவடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட பாதுகாப்பு சோதனை நிறைவுதென் தமிழகத்தில் மழை வாய்ப்புதிருப்பரங்குன்றம் கோயிலில் பிரதமரின் சிறப்பு பாதுகாப்புக் குழு ஆய்வு!‘நீதித் துறையில் ஊழல்’: என்சிஇஆர்டி பாடப் பிரிவுக்கு தலைமை நீதிபதி கடும் ஆட்சேபம்!தமிழ்நாடு, புதுச்சேரி தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? - தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்! 2025-இல் சா்வதேச அளவில் 129 செய்தியாளா்கள் கொலை!
/

சூரியதாகம்: கே. அசோகன்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:20 pm

கவிதைமணி

அறிவார்ந்த முன்னோரெலாம்  அழக ழகாய்
அங்காங்கே ஏரி-குளம்தான் வெட்டி வைத்தே
அருஞ்சுவை தண்ணீரை சேமித்தே தான்
அன்றாட பயன்பாட்டில்  மகிழ்ந்த னரே !

அறிவிலே நாமுயர்ந்தோ மென்றே சொல்லி
அறிவியலின் பெயராலும்  பூமி தன்னை
எரிதழலாய் மாற்றிவிட்டு ஐயோ கோ!
எரிக்குதே சூரியதாக  மென்கின் றோமே!

பனிமலையின் சிகரமதில் படிந்தி ருக்கும்
பனிப்பாளம் கரைந்திடும் சூழல் தன்னை
இனியேனும் செய்யா(து) இருந்து வந்தால்
இனியஅலை கடல்-மட்டம் உயர்ந்தி டாதே!

தணியாத தாகம்தான்  கொண்டு விட்ட
தழல்கக்கும் கதிரவனை தணிய செய்ய
அணியாக சேர்ந்தே உழைத்திடு வோமே!
அவனிக்கு அதுதான் நல்லுதவி தானே!

பொன்மாலை பொழுதிலும் மஞ்சள் வெயில்
பொசுக்கித்தான் விடுதேயென புலம்பல் ஏனோ?
மண்துளிகள் பாதங்களிலே படாத வண்ணம்
மண்ணையே மாற்றிவிட்டால் விளையு மாமோ?
விண்முட்டும் புகைபோக்கிகள் கட்டி விட்டே
வெளித்தள்ளும் மாசு-புகை பறக்க விட்டோமே!
கண்குளிரும் வயல்வெளிகள் தோன்ற செய்ய
கருத்தாக உழவருக்கு ஆதரவளிப் போமே
        
கூர்த்தமதி கொண்டவர்கள் ஏடுகள் காட்டும்
கொள்கைகள் படித்தேதான் கைக்கொள் வோமே!
ஆர்வத்தோடு அனைவருமே ஒன்று சேர்ந்தே
அங்காங்கே சுத்தம்தான் செய்திடு வோமே!

ஊர்தோறும் நல்சோலை ஆக்கி வைத்தே
ஓய்வாக அதன்காற்றில் மகிழ்ந்திருந் தால்
பேர்புகழும் பெருமையும் தன்னால் சேரும்
பொசுக்கும் சூரியதாகம் அடங்கிடும் தானே!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.