பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!இலவசங்களுக்கு எதிரான மனு: அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்புகூடுதல் பெட்டிகளுடன் மின்சார ரயில்கள் இயக்க நடவடிக்கை: ரயில்வே அதிகாரிகள் தகவல்!இன்று உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி: சென்னை மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்புவடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட பாதுகாப்பு சோதனை நிறைவுதென் தமிழகத்தில் மழை வாய்ப்புதிருப்பரங்குன்றம் கோயிலில் பிரதமரின் சிறப்பு பாதுகாப்புக் குழு ஆய்வு!‘நீதித் துறையில் ஊழல்’: என்சிஇஆர்டி பாடப் பிரிவுக்கு தலைமை நீதிபதி கடும் ஆட்சேபம்!தமிழ்நாடு, புதுச்சேரி தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? - தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்! 2025-இல் சா்வதேச அளவில் 129 செய்தியாளா்கள் கொலை!
/

சூரிய தாகம்: திருமாளம் எஸ்.பழனிவேல்  

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:20 pm

கவிதைமணி

மழையைத்  தேடித் தேடி 
அலுத்துப் போன ஆறுகள் 
குப்பைகளால் 
முகத்தை மூடிக்கொண்டு இருக்கின்றன..

ஆட்டத்தை மறந்து போன மயில்கள் 
மைல்கற்களில் அமர்ந்து 
ஹிந்தி கற்கும் யோசனையில் 
மூழ்கிப் போயின..

தண்ணீர் தேடி அலைகிறார்கள் 
ஒரு கூட்டம் குடங்களோடு..
இன்னொன்று 
குளிர் விக்கும் பானங்களுக்காக..
                                       
எங்கே போனது இந்த மேகக்கூட்டங்கள்  
அடித்துக்  கேட்கின்றன 
கடல் அலைகள் 
சி.பி.ஐ. விசாரணை கேட்டு..

வழிந்தோடும் வியர்வையோடும்                    
அடங்காத தாகத்தோடும் 
பார்த்துக் கொண்டு இருந்த 
சூரியன் 
காரணம் கேட்டு 
தகவல் அறியும் சட்டம் மூலமாக 
வருண பகவானுக்கு 
கடிதம் அனுப்பியது.. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.