சூரிய தாகம்: அழகூர். அருண். ஞானசேகரன்


சூரியன்மிக தாகமுற்று சுத்தமாக நீர்வுறிஞ்சிட
பாரினிலே மழைகுறையப் பார்த்திட்டோம் ! -- மாரிஅன்று
மும்முறை நாடெங்கும் முறையாகப் பெய்ததுவாய்
நம்முன்னோர் சொன்னதனை நம்பு !
வெகுவாக மழைகுறைந்து விட்டதெலாம் நாடாளத்
தகுதியிலார் தமைதேர்ந்த தால்தானாம்! -- வகுத்திட்ட
அறநூல்கள் கூறுமிதை ; அறியாதார் மூடர்களே !
மறந்ததே இதைநம்மின் மனம் !
ஆதவனின் கருணையதே அகிலமதை வாழ்விக்கும் ;
தோதாக மழைபொழியத் துணைநிற்கும் ! -- ஏதமிலா,
ஆட்சியதும் நடக்கத்தான் அதுகருணை பொழிவதெலாம் ;
மாட்சிமிக்கோர் தனைதேர்தல் மாண்பு !
சூரியனின் தாகமதால் சுருங்கியதே மழைவளமும் ,
யாரிதனை சரிசெய்வார் இனியேனும் ? -- நீரின்றி
வறண்டிட்ட விளைநிலங்கள் , வாட்டமுற்றத் தமிழ்மக்கள் ;
மறந்ததுமேன் வருணனின் மனம் ?
நீரின்றி உயிர்களதும் நிலைத்திடுமோ மண்மீதில் ,
கூரியநல் மதிதீர்வைக் கொடுத்திடுமோ ? -- பாரினிலே ,
ஆதவனின் கருணையதே ஆக்குவதும் அழிப்பதுவும் ;
ஏதவனின் கருணைக்கு இணை ?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...