பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!இலவசங்களுக்கு எதிரான மனு: அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்புகூடுதல் பெட்டிகளுடன் மின்சார ரயில்கள் இயக்க நடவடிக்கை: ரயில்வே அதிகாரிகள் தகவல்!இன்று உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி: சென்னை மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்புவடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட பாதுகாப்பு சோதனை நிறைவுதென் தமிழகத்தில் மழை வாய்ப்புதிருப்பரங்குன்றம் கோயிலில் பிரதமரின் சிறப்பு பாதுகாப்புக் குழு ஆய்வு!‘நீதித் துறையில் ஊழல்’: என்சிஇஆர்டி பாடப் பிரிவுக்கு தலைமை நீதிபதி கடும் ஆட்சேபம்!தமிழ்நாடு, புதுச்சேரி தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? - தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்! 2025-இல் சா்வதேச அளவில் 129 செய்தியாளா்கள் கொலை!
/

சூரிய தாகம்: -பெருமழை விஜய்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:20 pm

கவிதைமணி

இலைகள் சருகானதால்
சூரிய தாகம் இங்கு 
சுருதி ஏறி அலைகிறது!

சூரியக் கதிர்களால்
துளிர் விட்ட இலைகள்
கருகுங் காலம் இது!

அற்ப ஆசைகளால்தான் 
இந்த மனிதர்கள்
ஆபத்தைச் சந்திக்கிறார்கள்!

கோடை மழை ஏமாற்றினாலும்
பணமழைக்கு  நாட்டில்
பஞ்சமிருப்பதாகத் தெரியவில்லை!

பணவெள்ளம் ஆர்.கே நகரைப் 
புரட்டியே போட்டதால்
போயிற்று தேர்தலும்!

முன்னவர் கோடு போட...
பின்னவர் ரோடே போட...
தடுமாறிக் கிடக்கிறது தமிழகம்!

எல்லா சானல்களிலும்
இவர்களைப் பற்றிய பேச்சுதான்
இருபத்து நாலு மணி நேரமும்!

உழுதே இளைத்தவன்...
இடுப்புத் துணியுமின்றி...
இருக்கிறான் தலைநகரில்!

கூவத்தூர் கூட்டம் இங்கு
கும்மாளம் போட்டுக் கொண்டே
கூட்டைத் தேடுகிறது!

தாகங் காரணமாகவே தமிழகம்...
இந்திய வரை படத்திலிருந்து...
உதிர்ந்திடுமோ என்றே பயம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.